திருப்பரங்குன்றம் வழக்கு; தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத்தடை
நமது நிருபர்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் 5 பேர் கொண்ட குழு வழிபட அனுமதிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்தது.
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தனி நீதிபதியின் உத்தரவுப்படி தீபம் ஏற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான கலெக்டர், போலீஸ் கமிஷனர் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தனர். இந்த அவமதிப்பு வழக்கில் நீதிபதி சுவாமிநாதன் விசாரணைக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் ,ஜோதி ராமன் அமர்வு மார்ச்17ல் இடைக்கால தடை விதித்தது.
நீதிபதி சுவாமிநாதன் மலை உச்சி தீபத்தூண் அருகே மலர் தூவி வழிபட 5 பேரை அனுமதிக்க வேண்டும் என மற்றொரு உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிராக கோயில் நிர்வாகம், தர்கா நிர்வாகம், மதுரை போலீஸ் கமிஷனர் தரப்பில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 08) மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதி ராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மலை உச்சியில் 5 பேர் கொண்ட குழு வழிபட அனுமதிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்தது. திருப்பரங்குன்றம் தொடர்பான அனைத்து வழக்கையும் ஜூன்4ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
வாசகர் கருத்து (44)
ramani - dharmaapuri,இந்தியா
09 ஏப்,2026 - 04:39 Report Abuse
இந்த தீர்ப்பின் மீது சந்தேகம் வருகிறது. ஹிந்துக்கள் இணைந்து போராட வேண்டும் 0
0
Reply
JAYARAMAN VENKATRAMAN - ,இந்தியா
08 ஏப்,2026 - 21:12 Report Abuse
ஹிந்துக்கள் இணைந்து போராட வேண்டும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல் இதை மத நல்லிணக்கம் வேண்டும் அனைவரும் ஆதரிப்பார்கள் 0
0
Reply
venugopal s - ,
08 ஏப்,2026 - 19:01 Report Abuse
வேறு என்ன செய்வது? 0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
08 ஏப்,2026 - 18:49 Report Abuse
திருப்பரங்குன்றத்தில் அமைதியான முறையில் இஸ்லாமியர்களின் விருப்பத்துடன் தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்பது தான் ஹிந்துக்களின் ஆசை. அமைதி தமிழகத்தின் தூண் போன்றது. இதில் பிரச்னையை கிளப்பிவிட்டு, வன்முறையை தூண்ட அரசியல்வாதிகள் நினைக்க கூடாது. 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
08 ஏப்,2026 - 18:29 Report Abuse
இது வேண்டுமென்றே அரசியல்வாதிகளால் உண்டான பிரச்சனை. பழைய ஆவணங்களை வைத்து வழங்கிய தீர்ப்பை அரசியல் காரணங்களுக்காக தடை செய்கிறார்கள். ஆப்கானியனுக்கும், படையெடுப்பாளனுக்கும், திருப்பரங்குன்றத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதை ஹிந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஹிந்துக்கள் வோட்டு போடும் போது உஷாராக இருக்க வேண்டும். வெளி நாடுகளில் இருந்து தூண்டப்படும் இந்த மாதிரி பிரச்சனைகளை தூண்டி விடுவது யார் என்பதை புரிந்து கொண்டால் இந்த மாதிரி பிரச்சனைகள் பின்னால் உங்கள் வீட்டிற்கு வராமல் பார்த்து கொள்ளலாம். 0
0
Reply
Jawaharlu Naidu - Manama,இந்தியா
08 ஏப்,2026 - 18:18 Report Abuse
கடவுளுக்காக ஒரு போராட்டம் என்றால் அது எப்படி வெற்றி பெறாமல் இருக்கும், போராட்டம் வெற்றி தோல்வி உண்மையின் கைகளில், கடவுளின் கைகளில், கடவுளை.நம்பி நாம் அமைதியாக பிரார்த்திப்போம் ஹிந்துக்களே... 0
0
Reply
Jawaharlu Naidu - Manama,இந்தியா
08 ஏப்,2026 - 18:13 Report Abuse
பிரச்சினை கடவுளுக்கு என்றால் கூடலாம், பிஜேபிக்கு ஏன் கூட வேண்டும் 0
0
Reply
Natarajamoorthy - ,இந்தியா
08 ஏப்,2026 - 18:05 Report Abuse
தீபம் ஏற்றுவதில் திமுகவுக்கு என்ன பிரச்னை? 0
0
Reply
AMMAN EARTH MOVERS - ,இந்தியா
08 ஏப்,2026 - 17:54 Report Abuse
சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யவேண்டும் 0
0
Reply
K r Madheshwaran - ,இந்தியா
08 ஏப்,2026 - 17:30 Report Abuse
இது போன்ற கேவலமான நிலைக்கு காரணம் இந்துக்கள் ஜாதி ரீதியாக பிரிந்து இருப்பதுதான் இந்துக்கள் என்று மத ரீதியாக ஒன்றினைந்தால் வெற்றி தான் 0
0
Reply
மேலும் 34 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement