வரகூரில் பகவதியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

கிருஷ்ணராயபுரம், வரகூர், பகவதியம்மன் கோவில் திருவிழாவில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த வரகூர் பகவதியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடங்களை எடுத்து வந்தனர்.


நேற்று அதிகாலை, பகவதியம்மனுக்கு, மலர் மாலைகளுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, முத்து பல்லாக்கில் திருவீதி உலாவாக வந்து கோவிலுக்கு வந்தடைந்தார். தொடர்ந்து கிராம மக்கள் கோவில் முன் பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், கோழி அறுத்தல் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தி சிறப்பு வழிபாடு பூஜை செய்தனர்.

Advertisement