சேலம் பழைய சாலையில் சிக்னல் விளக்கு பழுது

கரூர், கரூர் அருகே போக்குவரத்து சிக்னல் செயல்படாமல் உள்ளதால், அப்பகுதிகளில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

கரூர்-சேலம் பழைய சாலையில், பல்வேறு இடங்களில் போக்குவரத்தை சீர் செய்யவும், விபத்துகளை தடுக்கவும், சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், பல இடங்களில் சிக்னல் விளக்குகள், சேதம் அடைந்து எரியாத நிலையில் உள்ளது. குறிப்பாக, வாங்கப்பாளையம் பிரிவு பகுதியில், பல மாதங்களாக சிக்னல் விளக்கு எரியாமல் சேதம் அடைந்துள்ளது. இதனால், கரூர்-சேலம் பழைய சாலையில் இருந்து, நாமக்கல், சேலம் மாவட்ட பகுதிக்கு செல்லும் வாகனங்கள் அடிக்கடி போக்கு

வரத்தில் சிக்கி கொள்கின்றன. மேலும், கரூர் நகரில் இருந்து வாங்கப்பாளையம் வழியாக, பல பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும், விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதால், சிறு சிறு விபத்து ஏற்படுகிறது.
எனவே, வாங்கப்பாளையம் பிரிவில், செயல்படாமல் சேதம் அடைந்துள்ள, சிக்னல் விளக்குகளை, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.

Advertisement