போலீஸ் செய்திகள்:திண்டுக்கல்

ஸ்பின்னிங் மில்லில் தீ

சாமிநாதபுரம்: பழநி- கோவை ரோடு தாழையூத்து அருகே உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் நேற்று மாலை தீப்பிடித்து பொருட்கள் எரிந்தன. மடத்துக்குளம், பழநி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். பழநி சாமிநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மாணவி தற்கொலை

சாணார்பட்டி: மருநூத்து மேற்கு தெருவை சேர்ந்தவர் கீதாஞ்சலி 15, பத்தாம் வகுப்பு மாணவி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட கீதாஞ்சலி வீட்டில் துாக்கிட்டு இறந்தார். சாணார்பட்டி இன்ஸ்பெக்டர் பிரபாகரன் விசாரிக்கிறார்.

கஞ்சா விற்ற இருவர் கைது

பழநி: உழவர் சந்தை பகுதியில் ரோந்து சென்ற டவுன் போலீசார் அங்கு நின்றிருந்த மூலக்கடை முகமது ஜக்ரியா 31, மணக்கண் 19, ஆகியோரை சோதனை செய்ததில் கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் 70 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement