கோடையிலும் விற்பனை இல்லை தென்னை சார் தொழிலாளர்கள் தவிப்பு
திருப்புவனம்: தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும் தென்னந்தட்டி, கிடுகு, விசிறி போதிய அளவு விற்பனையாகாததால் அதனையே நம்பி உள்ள தொழிலாளர்கள் சிரமப் படுகின்றனர்.
திருப்புவனம் , மடப்புரம், லாடனேந்தல், திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல், கானுார் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டரை லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. இவற்றில் இருந்து தென்னை சார் பொருட்களான மூணு மடை தட்டி, விசிறி, துடைப்பம் உள்ளிட்டவைகள் செய்யப்பட்டு வந்தன. கிராமப்புற பெண்கள் பலருக்கும் தென்னந்தட்டி, கிடுகு பின்னுவதன் மூலம் வருவாய் கிடைத்தது.
தென்னந்தோப்புகளில் காவலுக்கு நியமிக்கப்படுபவர்கள் தென்னை மரங்களில் இருந்து வெட்டப்படும் மட்டையை பயன்படுத்தி தென்னந்தட்டி, விசிறி, துடைப்பம் உள்ளிட்டவைகள் தயாரிப்பார்கள், மேலும் தட்டிகளை பலரும் விலைக்கு வாங்கிச் சென்று குடிசை தொழிலாக தட்டிகள் தயாரித்து விற்பனை செய்து வந்தனர்.
திருப்புவனம் பகுதியில் தயாராகும் துடைப்பங்கள் துாத்துக்குடி, சாயல்குடி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தன. தென்னந்தட்டிகள் பெரும்பாலும் கோடை காலங்களில் அதிகளவு விற்பனையாகும், தற்காலிக கடைகள், சுப நிகழ்ச்சிகளுக்கு தென்னந்தட்டிகள் அதிகளவு தேவைப்படும், தீ விபத்து உள்ளிட்ட காரணங்களால் தென்னந்தட்டிகளை பயன்படுத்துவது வெகுவாக குறைந்து விட்டது. ஷாமியானா துணிப்பந்தல் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் தட்டிகள் பல இடங்களில் விற்பனையாகாமல் தேங்கி கிடப்பதால் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர்.
பெண்கள் வீடுகளில் இருந்தே தட்டி, விசிறி தயாரித்து வியாபாரிகளிடம் விற்பனை செய்து வந்தனர். தென்னந்தட்டி, கிடுகு பின்னுவதன் மூலம் பெண்களுக்கு தினசரி 300 முதல் 500 ரூபாய் வரை வருவாய் கிடைத்து வந்தது. வீட்டு வேலைகளில் ஈடுபட்டு கொண்டே தட்டிகளும் பின்னுவதால் பெண்களுக்கு இது மிகவும் பிடித்தமான தொழிலாக இருந்தது. போதிய அளவு கிடுகு, தட்டிகள் விற்பனையாகாததால், வியாபாரிகளும் வரவில்லை. தென்னந்தட்டி, கிடுகுகள் விற்பனையாகாததால் பலரும் தென்னை மரங்களில் இருந்து கிடைக்கும் மட்டை, ஓலை உள்ளிட்டவற்றை தீ வைத்தும், மரங்களுக்கு அடியில் உரமாக இட்டும் அழித்து வருகின்றனர்.
மேலும்
-
எல்லையம்மன் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை
-
கடம்பத்துார் தனி தாலுகாவாக தரம் உயர்த்தப்படும் பிரசாரத்தில் அ.தி.மு.க., பி.வி.ரமணா வாக்குறுதி
-
விவசாயிகள், நெசவாளர்களுக்கு புதிய திட்டங்கள் செயல்படுத்துவேன் தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி உறுதி
-
தி.மு.க., வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் வி.சி., கட்சியினருக்கு திருமாவளவன் வேண்டுகோள்
-
உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும் கும்மிடி அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
-
மணல் கடத்திய இரு லாரிகள் பறிமுதல் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை