மக்கள் விரோத தி.மு.க., ஆட்சிக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்: கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளர் சூளுரை 

கள்ளக்குறிச்சி: மக்கள் விரோத தி.மு.க., ஆட்சிக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என அ.தி.மு.க., வேட்பாளர் ராஜிவ்காந்தி பேசினார்.

தியாகதுருகம் பேரூராட்சி பகுதியில் கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளர் ராஜிவ்காந்தியை ஆதரித்து முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு, நகர செயலாளர் ஷியாம்சுந்தர் தலைமையில் அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ., பா.ம.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் அனைத்து வார்டுகளிலும் வீதி வீதியாக நடந்து சென்று ஓட்டு சேகரித்தனர்.

அப்போது வேட்பாளர் ராஜிவ்காந்தி பேசியதாவது; கடந்த 5 ஆண்டுகால தி.மு.க., ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக மட்டுமே இருந்துள்ளது. விலை வாசி உயர்வு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை, கஞ்சா, போதை பொருட்கள் அதிகரிப்பு, கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. மக்கள் விரோத தி.மு.க., ஆட்சிக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி காலத்தில் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டுவரப்பட்டது. தி.மு.க., அரசு காழ்ப்புணர்ச்சி காரணமாக அனைத்து திட்டங்களையும் முடக்கியது. மக்கள் நல திட்டங்களை மீண்டும் செயல்படுத்த அ.தி.மு.க., ஆட்சி அமைய வேண்டும். மக்களோடு மக்களாக இருந்து வரும் என்னை, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்க முடியும். என்னை வெற்றி பெறச் செய்தால் உங்களில் ஒருவனாக இருந்து செயல்படுவேன் என பேசினார்.

அப்போது அ.தி.மு.க., நகர ஜெ., பேரவை செயலாளர் வேல்நம்பி, நகர துணை செலயாளர் கிருஷ்ணராஜ், பா.ம.க., மாவட்ட செயலாளர் தமிழரசன், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் கோமுகி மணியன், பா.ஜ., ராஜேஷ் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement