வி.சி., கட்சி வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு   

பண்ருட்டி: பண்ருட்டி அருகே, வி.சி., கட்சி வேட்பாளர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பண்ருட்டி அருகே, தி.மு.க., கூட்டணி வி.சி., கட்சி வேட்பாளர் அப்துல்ரஹ்மான் நேற்று, தொரப்பாடி பேரூராட்சி, கோட்லாம்பாக்கம் ஊராட்சி பகுதியில் ஓட்டு கேட்டு பிரசாரம் மேற்கொண்டார்.

அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர்கள், வெங்கட்ராமன், ராமு, தொரப்பாடி பேரூர் செயலாளர் சுந்தரவடிவேல் , வி.சி., கட்சி மாவட்ட செயலர் அருள்செல்வம் முன்னிலை வகித்தனர்.

இதில் பேரூராட்சி சேர்மன் வனஜா, துணை சேர்மன் காயத்ரி, முன்னாள் ஒன்றிய செயலாளர் பலராமன், மாவட்ட இலக்கிய அணி மதனகுரு, தொரப்பாடி தி.மு.க., கவுன்சிலர்கள் ராகவன், மூர்த்தி, ராஜேஷ், திவ்யாஜெயக்குமார் , வனிதாமோகன்,பத்மநாபன், தே.மு.தி.க., துணை செயலாளர் சந்திரன், பொருளாளர் சிவா, வி.சி., கட்சி நகர சயெலாளர் வீரமணி, பொருளாளர் பாரதி, மா., கம்யூ தேவநாதவன், காங்.,நகர தலைவர் நடராஜன், செயலாளர் குமாரராஜன், கோட்லாம்பாக்கம் தர்கா முத்தவல்லி ஐதர்அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement