பழனிசாமி  முதல்வராவது உறுதி:  சொரத்துார் ராஜேந்திரன் நம்பிக்கை 

கடலுார்: நெய்வேலியில் அ.தி.மு.க, வேட்பாளர் சொரத்துார் ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தார்.

நெய்வேலி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க, வேட்பாளர் சொரத்துார் ராஜேந்திரன் போட்டியிடுகிறார். இவர், நெய்வேலி வட்டம், 9ல் உள்ள தேர்தல் பிரிவு அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரி சண்முக வள்ளியிடம் நேற்று முன்தினம் 12:30 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மனு தாக்கல் செய்து வெளியே வந்தவருக்கு, அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சமாக வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.

சொரத்துார் ராஜேந்திரன் கூறுகையில், 'அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிடுகிறேன்.

எனக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும். நான் வெற்றி பெற்றால் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்கும். பொதுச் செயலாளர் பழனிசாமி, முதல்வராக பதவியேற்பது உறுதி' என்றார்.

பா.ம.க., மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் கமலக்கண்ணன், கோவிந்தராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் முத்துலிங்கம், ஜெகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement