208 வேட்பாளர் 259 மனு தாக்கல் இரவு வரை நீடித்த குழப்பம்



ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 30ல், 25 வேட்பாளர்கள், 33 மனுக்களும், கடந்த, 2ல் 22 வேட்பாளர்கள், 26 மனுக்களும், கடந்த, 4 ல், 62 வேட்பாளர்கள், 75 மனுக்கள் என, 109 வேட்பாளர்கள், 134 வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

வேட்பு மனுத்தாக்கலின் இறுதி நாளான நேற்று, ஈரோடு கிழக்கில், 13 வேட்பாளர்கள், 19 மனுவையும், ஈரோடு மேற்கில், 8 வேட்பாளர்கள், 10 மனுவும், மேற்கில், 12 வேட்பாளர்கள், 12 மனுவையும், பெருந்துறையில், 8 வேட்பாளர்கள், 11 மனுவையும், பவானியில், 11 வேட்பாளர்கள், 13 மனுவையும், அந்தியூரில், 20 வேட்பாளர்கள், 24 மனுவையும், கோபியில், 14 வேட்பாளர்கள், 17 மனுவையும், பவானிசாகரில், 13 வேட்பாளர்கள், 19 மனுவையும் தாக்கல் செய்தனர். நேற்று மட்டும், 99 வேட்பாளர்கள், 125 மனுக்களை தாக்கல் செய்தனர்.

இதுவரை, 208 வேட்பாளர்கள், 259 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
நேற்று அதிக வேட்பாளர்கள், அதிக எண்ணிக்கையில் மனுவை தாக்கல் செய்ததால் மனுக்கள் பெற்றதில் பெருந்துறை, ஈரோடு கிழக்கு, மேற்கு, அந்தியூர், கோபி, பவானிசாகர் தொகுதியில் பல குழப்பம் நீடித்ததால், இறுதி வரை தேர்தல் ஆணைய தளத்தில் பதிவேற்றம் செய்து, ஒப்புதல் பெற தாமதம் ஆனது. குறிப்பாக, பெருந்துறை, அந்தியூர் தொகுதியை இறுதி செய்வதில் இரவு, 10 மணிக்கு மேலும் குழப்பம் நீடித்ததால், இறுதி வேட்பாளர்
பட்டியல் வெளியீடு வரை குழப்பம் தொடரும் என,
தேர்தல் பிரிவினர் புலம்புகின்றனர்.

Advertisement