'அனைத்து திட்டங்களையும் நானே செய்தேன்' அமைச்சர் பேச்சால் கட்சியினர் அதிருப்தி

ராசிபுரம், ''ராசிபுரத்தில் அனைத்து திட்டங்களையும் நானே செய்தேன்,'' என, அமைச்சர் மதிவேந்தன் பேசியது, தி.மு.க., தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில் அமைச்சர் மதிவேந்தன், மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், சில நாட்களுக்கு முன் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில், கூட்டணி கட்சியினர் முன்னிலையில் பேசிய வீடியோ, தற்போது பரவி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:
இந்த தொகுதியில் ஏற்கனவே அமைச்சராகவும், சபாநாயகராகவும் இருந்த, அ.தி.மு.க.,வினர், தொகுதி மக்களுக்கு எந்த நலத்திட்டங்களையும் செய்யவி????. ??????, ???? ?????? ??????
ல்லை. அதனால், தான் மக்கள் எனக்கு வாய்ப்பு வழங்கினர். கடந்த, 2021ல் சாதாரண நபராக உங்கள் முன் நின்றேன். அவர்கள் செய்ய தவறிய பணிகளை எல்லாம் இந்த மதிவேந்தன் தான் செய்து காட்டினேன். 846 கோடி ரூபாய் மதிப்பில் ராசிபுரம் தொகுதி மக்களின் நீண்டகால குடிநீர் தேவையை பூர்த்தி செய்தவன் இந்த மதிவேந்தன்.
தொகுதியில் சாலை வசதிகளை மேம்படுத்தி பலமான கட்டமைப்பை உருவாக்கியவன் இந்த மதிவேந்தன். மருத்துவ வசதியை உயர்த்தி மாவட்ட தலைமை மருத்துவமனையை ராசிபுரத்திற்கு கொண்டு வந்தவன் இந்த மதிவேந்தன். பெரிய நகரங்களில் இருப்பது போன்ற தகவல் தொழில்நுட்ப பூங்காவை பகுதி இளைஞர்களுக்காக கொண்டு வந்து சேர்த்தவன் இந்த மதிவேந்தன். நாரைகிணறு பகுதியில் அங்கீகாரம் இல்லாத நிலத்தில் வாழ்ந்து வந்த மக்களுக்கு நிலப்பட்டா பெற்றுத்தந்தவன் இந்த மதிவேந்தன் என, தன்னை முன்னிலைப்படுத்தியே பேசினார்.
அரசு மற்றும் கட்சியின் கூட்டு முயற்சியால் வந்த திட்டங்கள் அனைத்தையும், 'நானே செய்தேன்' என, அவர் பேசியது கட்சி நிர்வாகிகள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
தேர்தல் நேரத்தில் சலசலப்பு
ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாணட் பின்புறம் உள்ள எம்.எம்.சி., காலனியில், நேற்று மாலை, 4:30 மணிக்கு, தி.மு.க., துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தியூர் செல்வராஜ் மற்றும் மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் ஆகியோர், மாலை, 5:15 மணி வரை, தி.மு.க., அரசின் சாதனைகளை கூறி ஓட்டு சேகரித்தனர்.
ஆனால், அதுவரை வேட்பாளர் மதிவேந்தன் அந்த இடத்திற்கு வரவில்லை. முக்கிய தலைவர்கள் அந்த இடத்தைவிட்டு கிளம்பிய பிறகே, அவர் அங்கு வந்து பிரச்சாரம் செய்தார். அமைச்சரின் இத்தகைய செயல்பாடுகளாலும், தற்பெருமை பேச்சுகளாலும், ராசிபுரம் தொகுதி, தி.மு.க., தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். இச்சம்பவம், தேர்தல் நேரத்தில் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

Advertisement