தி.மு.க., - மா.செ.,வை எதிர்த்து வி.சி.க.,வினர் கண்டன கோஷம்
போச்சம்பள்ளி, ஊத்தங்கரையில், காங்., கட்சியின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவில், தி.மு.க., மாவட்ட செயலாளரை கண்டித்து, வி.சி.க.,வினர் கண்டன கோஷம் எழுப்பினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி, தி.மு.க., கூட்டணியில், காங்., கடசிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளராக, காங்., கட்சியை சேர்ந்த குப்புசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி, ஊத்தங்கரையில், அரூர் செல்லும் சாலையில், காங்., சார்பில் தேர்தல் அலுவலகம் நேற்று காலை, 11:00 மணிக்கு திறக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அங்கிருந்த கூட்டணி கட்சியான, வி.சி.க.,வினர், தி.மு.க., மாவட்ட செயலாளர் மதியழகன், தங்களை ஓட்டு சேகரிக்க அழைக்காமல் வேண்டுமென்றே தவிர்ப்பதாக கூறி, கண்டன கோஷம் எழுப்பினர். இதனால் தேர்தல் அலுவலக திறப்பு விழாவில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சலசலப்பு நிலவியது.
பின்னர், காங்., வேட்பாளர் குப்புசாமி வேட்புமனு தாக்கல் செய்ய, ஊத்தங்கரை தாலுகா அலுவலகம் சென்றார். அப்போது, வி.சி.க.,வினர் கோஷத்தினால் அதிருப்தியடைந்த, தி.மு.க.,வினர் யாரும் அவருடன் செல்லவில்லை.
மேலும்
-
பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு; ஆதவ் அர்ஜூனா மனு நிறுத்தி வைப்பு
-
தமிழகம் தான் டபுள் டிஜிட் வளர்ச்சி; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
திருநெல்வேலியில் நாளை விஜய் பொதுக்கூட்டம்: 51 நிபந்தனை விதித்த போலீசார்
-
அதிகார மமதையில் மக்களுக்கு நிகழும் கொடுமைகள்: கமல் காட்டம்
-
இனி ஆந்திர தலைநகர் அமராவதி: அதிகாரப்பூர்வமாக அரசிதழ் வெளியீடு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு