குஜராத் மக்களுக்கு எதிரான பேச்சு: கார்கேவுக்கு பா.ஜ., கண்டனம்
காந்திநகர்: 'கேரள மக்கள் படிப்பறிவு மிக்கவர்கள். அவர்கள் குஜராத் மற்றும் பிற மாநில மக்களை போன்றவர்கள் அல்ல' என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 'இவரது பேச்சு, குஜராத் மட்டுமின்றி பிற மாநில மக்களை அவமதிப்பதாக உள்ளது' என, பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரசாரம்
கேரளாவில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலை நிறைவடைய உள்ளது. இந்நிலையில், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் நேற்று முன்தினம் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், 'கேரள மக்கள் படிப்பறிவு மிக்கவர்கள்.
அவர்கள் குஜராத் அல்லது பிற மாநில மக்களை போல் அல்ல. அவர்களை திசை திருப்பவும் முடியாது; ஏமாற்றவும் முடியாது' என்றார்.
அவமதிப்பு
இவரது பேச்சுக்கு, பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பா.ஜ., தேசிய இளைஞரணி துணைத் தலைவரும் குஜராத் துணை முதல்வருமான ஹர்ஷ் சங்வி கூறியதாவது:
நம் நாட்டிற்கு மஹாத்மா காந்தி, சர்தார் வல்லபபாய் படேல், பிரதமர் மோடி உள்ளிட்டோரை வழங்கிய இந்த குஜராத் மண்ணையும், இங்கு வசிக்கும் 6 கோடி மக்களையும் கார்கே அவமதித்துள்ளார். குஜராத் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு? உங்கள் கட்சியை விரட்டியது தான் இந்த விரக்திக்கு காரணமா?
இது, உங்களின் உண்மை தரத்தை காட்டுகிறது. குஜராத் மக்கள் எப்போதும் காங்.,கை நிராகரித்தே வந்துள்ளனர். எதிர்காலத்திலும் அவர்கள் தொடர்ந்து நிராகரிப்பர். குஜராத், இதை மன்னிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
ஏனோ தெரியவில்லை, ஒரிஸ்ஸா சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடி அவர்கள் பூரி ஜெகந்நாதர் கோவில் பற்றி தமிழக மக்கள் குறித்து பேசிய பேச்சு ஞாபகம் வருகிறது!
குஜராத் மற்றும் மற்ற மாநில மக்கள் தேச விரோத கும்பலுக்கு ஆதரவான கான் கிராஸ் கட்சியை விரட்டி விரட்டி அடிக்கிறார்கள்.... தொடர் தோல்வி காரணமாக ஏற்பட்ட விரக்தியில் இப்படி வாய்க்கு வந்தபடி உளறி கொண்டு இருக்கிறார்....
படிப்பறிவே இல்லாத ஓர் அரசியல்வாதி எதோ தெறித்தவற்றை வாய்க்கு வந்ததை உளறி இருக்கிறார் யாரும் அதை அதிகமாக பொருட்படுத்தவும் மாட்டார்கள்.
பிற மாநிலங்கள் என்றால் அவரின் சொந்த மாநிலமான கர்நாடகாவையும் சேர்த்து சொல்கிறார். விடுங்க அவர் ஒத்து கொண்டுவிட்டார்.
கார்கேவின் சொந்த மாநிலத்தில் கண்ணில் கருப்புத்திரை கட்டப்பட்டவர்கள்தான் காங்கிரசுக்கு வாக்களித்து வருகிறார்கள்.மேலும்
-
இந்தியா -- நியூசிலாந்து ஒப்பந்தம் 24ம் தேதி நிறைவேற வாய்ப்பு
-
ஏர் இந்தியா சி.இ.ஓ., கேம்பெல் வில்சன் விலகல்
-
போரால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு ரூ.2.50 லட்சம் கோடி கடன் உத்தரவாதம்; மத்திய அரசு பரிசீலனை
-
முக்கிய எட்டு நகரங்களில் வீடுகள் விற்பனை 4% சரிவு
-
காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலைய பிரச்னைக்கு.. தீர்வு வருமா?. இடத்தை அளவிட குழு அமைத்தது சுப்ரீம் கோர்ட்
-
ரூ.45 கோடியில் குடிநீர் திட்டத்தை முதல்வர் திறந்தும்.. பயனில்லை! 9 ஊராட்சிகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்