இந்தியா -- நியூசிலாந்து ஒப்பந்தம் 24ம் தேதி நிறைவேற வாய்ப்பு
புதுடில்லி: இந்தியா - நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், வரும் 24ம் தேதி கையெழுத்தாக வாய்ப்புள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் மேலும் தெரிவித்தாவது:
இரு நாடுகளும், க டந்தாண்டு டிச., 22ம் தேதி வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டன. இந்த தடையற்ற ஒப்பந்தத்தின்படி அனைத்து வகையான இந்திய பொருட்களுக்கும் நியூசிலாந்தில் இறக்குமதி வரி பூஜ்ஜியமாக்கப் படுகிறது. நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செ ய்யப்படும் மரத்துண்டுகள், வைன், அவகோடா, புளூபெர்ரி பழங்கள் உள்ளிட்ட 95 சதவீத பொருட்களுக்கு, நம் நாட்டில் வரி குறைக்கப்படும்; அல்லது பூஜ்ஜியமாக்கப்படும்.
பால் மற்றும் பால் பொருட்களுக்கு வரிச்சலுகை கிடையாது. ஆண்டுக்கு 5,000 நியூசிலாந்து விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்படும். அடுத்த 15 ஆண்டுகளில் 1.86 லட்சம் கோடி ரூபாய் அன்னிய முதலீடு இந்தியாவுக்கு கிடைக் கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு தெரிவித்தனர்.
மேலும்
-
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் அமல்; கச்சா எண்ணெய் விலை 18 சதவீதம் சரிவு
-
வேகத்தடை அமைக்க கோரிக்கை
-
தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி 'மாஜி' அமைச்சர் ஆருடம்
-
மனைவி பிரிந்த ஏக்கம் கணவர் தற்கொலை
-
உருளையன்பேட்டை தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் இறுதி பிரசாரம்
-
என்.ஆர்.காங்., வேட்பாளர் பாகூரில் ஓட்டு சேகரிப்பு