முக்கிய எட்டு நகரங்களில் வீடுகள் விற்பனை 4% சரிவு
தொடர்ச்சியான விலை உயர்வு மற்றும் மேற்காசிய போர் பதற்றம் காரணமாக, நடப்பாண்டு ஜனவரி - மார்ச் காலாண்டில், நாட்டின் முக்கிய எட்டு நகரங்களில் வீடுகள் விற்பனை 4 சதவீதம் சரிந்துள்ளதாக, 'நைட் பிராங்க் இந்தியா' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சென்னையை பொறுத்தவரை இந்த காலகட்டத்தில் வீடுகள் விற்பனை 9 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நகரங்களில் கடந்தாண்டு இதே காலகட்டத்தில், மொத்தம் 88,361 வீடுகள் விற்பனையான நிலையில், நடப்பாண்டில் 84,827 ஆக குறைந்துள்ளது. மேலும், புதிதாக சந்தைக்கு வரும் வீடுகளின் எண்ணிக்கையும் 2 சதவீதம் குறைந்து, 94,855 ஆக பதிவாகியுள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வேகத்தடை அமைக்க கோரிக்கை
-
தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி 'மாஜி' அமைச்சர் ஆருடம்
-
மனைவி பிரிந்த ஏக்கம் கணவர் தற்கொலை
-
உருளையன்பேட்டை தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் இறுதி பிரசாரம்
-
என்.ஆர்.காங்., வேட்பாளர் பாகூரில் ஓட்டு சேகரிப்பு
-
தொகுதி மக்கள் என்னை எளிதாக சந்திக்கலாம் மங்கலம் தி.மு.க., வேட்பாளர் ரங்கன் உருக்கம்
Advertisement
Advertisement