ஈரான் தம்பதி குடகில் பரிதவிப்பு

குடகு: குடகு மாவட்டத்தை சேர்ந்தவர் நவீனா. இவர், 30 ஆண்டுகளுக்கு முன், பெங்களூரில் பணியாற்றும் போது, ஈரானின் நாதீர் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இது, நாளடைவில் காதலாக மாறியது. திருமணம் செய்து கொண்ட இவர்கள், ஈரானின் போஜ்நுார் பகுதியில் வசிக்கின்றனர்.

தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் சிவில் இன்ஜினியராகவும், மற்றொருவர் கட்டடக்கலை வல்லுநராகவும் பணியாற்றுகின்றனர். தம்பதி ஆண்டு தோறும், டிசம்பரில் குடகுக்கு வருவர். மார்ச் வரை இங்கு தங்கி விட்டு செல்வர்.

அதன்படி, 2025 டிசம்பரில் மகன்களை ஈரானில் விட்டு விட்டு குடகுக்கு வந்தனர். மார்ச், 16ம் தேதி பெங்களூரில் இருந்து சார்ஜா வழியாக ஈரானின் போஜ்நுார் செல்ல, விமான டிக்கெட் முன் பதிவு செய்திருந்தனர். ஆனால், அமெரிக்கா மற்றும் ஈரான் போரால் விமானம் ரத்து செய்யப்பட்டது.

அதன்பின் ஏப்ரல், 15க்கு டிக்கெட் முன் பதிவு செய்தனர். அந்த விமானமும் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், குடகிலேயே தங்கியுள்ளனர். நவீனாவின் கணவர் நாதீரின் பாஸ்போர்ட் காலம் முடிவடைகிறது.

அதற்குள் அவர் ஈரான் செல்ல வேண்டும். மகன்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. எதுவும் செய்ய முடியாமல் பரிதவிக்கின்றனர்.

Advertisement