சிகரெட் தகராறில் ரவுடி கொலை
மாண்டியா: மா ண்டியா சோமகவுடா நகரை சேர்ந்தவர் யஷ்வந்த், 21; ரவுடி. இவரது நண்பர் கள் தர்ஷன், சச்சின்.
நேற்று முன்தினம் இரவு மூவரும் மது அருந்தினர். மது போதையில், மத்துாரில் உள்ள பெட்டி கடையில் சிகரெட் வாங்கினர். யார், யாருக்கு எத்தனை சிகரெட் என்பதில் பிரச்னை எழுந்தது. பின், தர்ஷன், சச்சின் இருவரும் இணைந்து யஷ்வந்தை தாக்கினர்.
கையில் கிடைத்த கற்களை கொண்டு பரஸ்பரம் தாக்கி கொண்டனர். இதில், யஷ்வந்துக்குதலையில் பலத்த அடிபட்டது.
அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகராறில் படுகாயம் அடைந்த சச்சின், தர்ஷன் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து, யஷ்வந்தின் தாய் பிரமோ மத்துார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement