சிறுவனை கடித்த நாய் உரிமையாளர் மீது வழக்கு
பெங்களூரு: பெங்களூரு, ராஜாஜிநகரின், முதலாவது பிளாக்கில் 11 வயதான சிறுவன் வசிக்கிறார்.
இவர் நேற்று காலை, தன் வீட்டுக்கு பிரட் வாங்குவதற்காக கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இதே பகுதியில் வசிக்கும் நபர், தன் வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அந்த நாய், சிறுவனை கண்டதும், பாய்ந்து தொடையில் கடித்தது. சிறுவனை தன் நாய் கடித்தது தெரிந்தும், சிறுவனுக்கு நாயின் உரிமையாளர் சிகிச்சை அளிக்காமல், அலட்சியம் காட்டினார். அவரது பெற்றோர், மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று, சிகிச்சை அளித்தனர்.
சிறுவனின் பெற்றோர் சுப்ரமண்யபுரா போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தனர். போலீசாரும் நாயின் உரிமையாளர் மீது, வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அளித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மக்கள் விரோத தி.மு.க., ஆட்சிக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்: கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளர் சூளுரை
-
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட ஓட்டு சாவடிகளில் தன்னார்வலர்கள் நியமனம்
-
உழவர்கரை காங்., வேட்பாளர் டைமன் நகரில் இறுதி கட்ட பிரசாரம்
-
உளுந்துார்பேட்டையில் வேளாண் கல்லுாரி :அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு உறுதி
-
ராமநாதபுரம் எம்.எல்.ஏ., க்களின் சொத்து மதிப்பு இருமடங்கு உயர்வு
-
கள்ளக்குறிச்சி தொகுதியை மீட்டெக்க வேண்டும்: தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் வேண்டுகோள்
Advertisement
Advertisement