கடும் குடிநீர் தட்டுப்பாடு லாரிகளில் விநியோகிக்க கோரிக்கை

அன்னூர்: அன்னூர் பேரூராட்சியில் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அன்னூர் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். கடந்த ஒரு மாதமாக, 12 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

மூன்று வாரங்களுக்கு முன்பு, வீதி வீதியாக லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக, குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

எனவே, பேரூராட்சி சார்பில் லாரிகளில், வீதிகளில், குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement