அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி; பிரேமலதா நம்பிக்கை

விருத்தாசலம்: விருத்தாசலம் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் பிரேமலதா, கம்மாபுரம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கிராமங்களில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

முன்னதாக, கூனங்குறிச்சி கிராமத்தில் விஜயகாந்த் படத்திற்கு மாலை அணிவித்து பிரசாரத்தை துவக்கினார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

தே.மு.தி.க., தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, பொருளாளர் ராஜ், ஒன்றிய செயலாளர்கள் பொன் தனசேகர், ராஜவன்னியன், ஜெயப்பிரியா ஜெய்சங்கர், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ், ஆசைத்தம்பி, ராயர், முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ராமு ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர்.

பின்னர், அம்மேரி, மேலகுப்பம், கொள்ளிருப்பு, காப்பாங்குளம், இருப்பு, முதனை, விருத்தகிரிகுப்பம், கோட்டேரி உள்ளிட்ட கிராமங்களில் திறந்தவேனில் நின்றபடி, வாக்காளர்களிடம் முரசு சின்னத்தில் ஓட்டு சேகரித்தார்.

கோட்டேரியில் வேட்பாளர் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:

விருத்தாசலம் தொகுதியில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். விருத்தாசலம் எனக்கு புதிது கிடையாது.

கடந்த, 2006ல் இருந்தது போல தான் மக்களின் மனநிலை இருக்கிறது. எங்கு சென்றாலும் கோவில் கட்டித்தர வேண்டும். அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கேட்கின்றனர்.

இந்த தேர்தலில் வெற்றி பெற்றதும், விஜயகாந்த் எப்படி எம்.எல்.ஏ.,வுக்கு அப்பாற்பட்டு ஒரு தனிநபராக செய்தரோ, அதுபோல நானும் என் மக்களுக்கு நல்லது செய்வேன். அவர்கள் வீட்டு பெண்ணைப் போல செய்து தருவேன்.

மக்களின் மிகப்பெரிய கோரிக்கையான விருதாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, கூறினார்.

Advertisement