அமைச்சர் கணேசன் ஓட்டு சேகரிப்பு

சிறுபாக்கம்: மங்களூர் ஒன்றியத்தில் யாதவர் அமைப்பினரை அமைச்சர் கணேசன் சந்தித்து ஓட்டு சேகரித்தார்.

திட்டக்குடி சட்டசபை தொகுதியில் தி.மு.க., சார்பில் அமைச்சர் கணேசன் போட்டியிடுகிறார்.

தொடர்ந்து, கடந்த சில தினங்களாக, மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகள் தோறும் அவர், ஓட்டு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில், சிறுபாக்கம் அடுத்த மாங்குளம் கிராமத்தில் யாதவர்கள் சமூக அமைப்பினர் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, மங்களூர் தி.மு.க., மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன் தலைமை தாங்கினார். அமைச்சர் கணேசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

இதில், திட்டக்குடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட யாதவர்கள் சமூகத்தினர் தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க வலியுறுத்தி பேசினார்.

மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட யாதவர் சமூக நிர்வாகிகள் சம்பத்குமார், சுந்தரமூர்த்தி, சிவகுமார், வரதன், பூமாலை, வரதராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement