வர்த்தக துளிகள்

ரூ.1,755 கோடி

செலுத்த

டாடா ஸ்டீலுக்கு

நோட்டீஸ்

புதுடில்லி: டாடா ஸ்டீல், கூடுதலாக நிலக்கரியை வெட்டியெடுத்ததாக கூறி 1,755 கோடி ரூபாய் செலுத்துமாறு ஜார்க்கண்ட் அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்நிறுவனம் 2001-2007 ஆண்டுகளில் வெஸ்ட் போகாரோ நிலக்கரி சுரங்கத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி 162 லட்சம் டன் நிலக்கரியை எடுத்ததாக நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை மறுத்த டாடா ஸ்டீல், கூடுதல் பணம் கேட்கும் ஜார்க்கண்ட் அரசின் கோரிக்கை நியாயமற்றது. மேலும், இந்த விவகாரத்தில் தகுந்த நீதி அமைப்புகள் வாயிலாக சட்ட ரீதியான தீர்வுகளை பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

Advertisement