கடந்த நிதியாண்டில் 'விர்ர்' வாகன விற்பனை 2.97 கோடி
கடந்த நிதியாண்டில் இந்தியாவில் வாகனங்களின் சில்லரை விற்பனை 13.30 சதவீதம் உயர்ந்து 2.97 கோடி என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக, வாகன முகவர்கள் கூட்டமைப்பான 'படா' வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய நிதிஆண்டில் கிட்டத்தட்ட 2.62 கோடி வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
@block_B@ முக்கிய தகவல்கள் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அமலுக்கு வந்த ஜி.எஸ்.டி., குறைப்பு, மக்களின் வாங்கும் திறனை அதிகரித்துள்ளது 2025 அக்டோபரில் நவராத்திரி, தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டும் 40 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் விற்பனை மேற்காசிய போர் காரணமாக வாகன விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக 53.20 சதவீத முகவர்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர் சி.என்.ஜி., மற்றும் மின்சார வாகனங்கள்மீது வாடிக்கையாளர்கள் ஆர்வம் அதிகரித்துள்ளது.block_B
@block_B@ நிதியாண்டு விற்பனை நிலவரம் வகை 2024 - 25 2025 - 26 வளர்ச்சி (%) இருசக்கரம் 1,88,89,595 2,14,20,386 13.40 மூன்று சக்கரம் 12,20,834 13,63,412 11.68 பயணியர் வாகனம் 41,63,927 47,05,056 13.00 டிராக்டர் 8,82,825 10,50,077 18.95 வர்த்தக வாகனம் 9,49,406 10,60,906 11.74 பிற 80,668 71,227 - 11.70 மொத்தம் 2,61,87,255 2,96,71,064 13.30block_B
@block_B@ மார்ச் விற்பனை 27 லட்சம் கடந்த மார்ச் மாதத்தில் வாகனங்களின் சில்லரை விற்பனை கிட்டத்தட்ட 25 சதவீதம் அதிகரித்து 26.92 லட்சமாக இருந்தது என 'படா' வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு மார்ச்சில் 21.49 லட்சமாக இருந்தது. குறிப்பாக 19.51 லட்சம் இருசக்கர வாகனங்களும்; 4.40 லட்சம் பயணியர் கார்களும் கடந்த மாதம் விற்பனை செய்யப்பட்டுள்ளன.block_B
மேலும்
-
பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு; ஆதவ் அர்ஜூனா மனு நிறுத்தி வைப்பு
-
தமிழகம் தான் டபுள் டிஜிட் வளர்ச்சி; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
திருநெல்வேலியில் நாளை விஜய் பொதுக்கூட்டம்: 51 நிபந்தனை விதித்த போலீசார்
-
அதிகார மமதையில் மக்களுக்கு நிகழும் கொடுமைகள்: கமல் காட்டம்
-
இனி ஆந்திர தலைநகர் அமராவதி: அதிகாரப்பூர்வமாக அரசிதழ் வெளியீடு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு