கும்மிடி.,யில் கோவிந்தராஜன் தீவிர பிரசாரம்

ஊத்துக்கோட்டை:கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ., வான, டி.ஜெ.கோவிந்தராஜன், மீண்டும் கும்மிட தொகுதியில் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து கடந்த, 2ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்து, தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

நேற்று பூண்டி வடக்கு ஒன்றியம், அம்மம்பாக்கம் ஊராட்சியில் உள்ள சீத்தஞ்சேரி கிராமத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, திறந்த ஜீப்பில் தி.மு.க., மாவட்ட செயலாளர் ரமேஷ் ராஜா, பூண்டி ஒன்றிய செயலர்கள் சந்திரசேகர், பொன்னுசாமி ஆகியோருடன் மக்களை சந்தி ஓட்டு சேகரித்தார். ஒவ்வொரு கிராமத்திலும், தி.மு.க., அரசு பெண்களுக்கு வழங்கிய இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்களை எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார். கூனிப்பாளையம், பென்னலார்பேட்டை, ராமலிங்காபுரம் உள்ளிட்ட, 12 ஊராட்சிகளில் கட்சியினருடன் டி.ஜெ.கோவிந்தராஜன் தேர்தல் பிரசாரம் செய்தார்.





Advertisement