விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே வயிற்று வலியால் விஷம் குடித்து கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

விக்கிரவாண்டி அடுத்த வி.பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம், 51; கூலித் தொழிலாளி. இவர், சில ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 5ம் தேதி இரவு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று அவர் இறந்தார்.

பெரியதச்சூர் போலீசார் வழக்கப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement