தமிழகத்தில் இதுவரை ரூ.462 கோடி பறிமுதல்: தேர்தல் கமிஷன் தகவல்
சென்னை: தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை ரூ.462 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், மதுபானம், போதைப்பொருள் உள்ளிட்டவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதியும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கிறது. தற்போது தேர்தல் களம் அனல் பறக்கிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க, தேர்தல் கமிஷனின் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்ட விபரங்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. இது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது: தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை ரூ.462 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், மதுபானம், போதைப்பொருள் உள்ளிட்டவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளது. 85 வயதிற்கு மேற்பட்ட 2.5 லட்சம் பேர் தபால் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர்.
ஏப்ரல் 13ம் தேதிக்குள் துணை ராணுவப் படையினர் தமிழகம் வருவார்கள். தமிழகத்தில் 5,938 பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள், 3,302 பதற்றம் நிறைந்த இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் செலவு ரூ.795 கோடி; 2024 பார்லிமென்ட் தேர்தல் செலவு ரூ.1,009 கோடி.தற்போது தமிழக சட்டசபை தேர்தலை நடத்த ரூ.1,302 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
ரூ 462 கோடி பறிமுதல்??? 10 நாளில்??? இவை எல்லாம் யாரிடமிருந்து பறிமுதல் ?சாதாரண மக்களிடமிருந்தா??? அரசியல் வியாதிகளிடமிருந்தா?? அரசியல் வியாதிகள் இல்லையென்றால் இது பூராவும் சாதாரணர்களிடமிருந்து என்று உறுதி செய்யப்படுகின்றது
ரோட்டில் நின்று ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்வார்கள் ஆனால் பக்கத்துக்கு தெருவில் வீடு வீடாக வோட்டுக்கு விநியோகிக்கப்படும் பணத்தை கண்டுகொள்ளமாட்டார்கள். மிக்க அறிவுமிக்கவர்கள். நாகரீக கோமாளிகள்.
எவ்வளவோ சீர்திருத்தம் கொண்டுவந்துள்ள தேர்தல் கமிஷனின் உலக மகா சொதப்பல் இந்த கரன்சி நோட்டு பறிமுதல் . எல்லாருக்கும் தெரியும் இந்த முறையில் பறிமுதல் செய்யப்படுவதெல்லாம் பொதுமக்களின் பணம் அதுவும் வியாபாரிகளின் முதல்
எந்த ஒரு அரசியல்வாதியின் பணமும் இதுவரை எந்த தேர்தலிலும் கண்டுபிடிக்கப்படவில்லை
இது என்ன கண்துடைப்பு ??
அரசியல் கட்சியின் நீண்டகால ஜாதிப்பிரமுகர்களையும் அமைதி மூர்க்கர்கள், மற்றும் ,,,மாற்றும் கும்பல்கள் கூட்டமாக கூடும் இடங்களில் ""ரெய்டு"" நடத்தினால்...... தேவையான அளவில் பணமும் பொருளும், மற்றெல்லாமும் கிடைக்கும். அதைவிட்டு விட்டு வெட்டியாக பொதுமக்கள் பணத்தை ஆட்டையை போடுவது தேர்தலா கமிஷனுக்கு இழுக்கு இன்னொரு அபத்தம் என்ன என்றால், பொதுமக்கள் கொண்டுவரும் பணத்துக்கு என்னத்த ""ஆவணங்கள்"" இல்லைன்னு ஒரு ஸ்டேட்மெண்டு. எந்த பேங்கு பணம் எடுத்தபிறகு என்ன ஆவணம் தரும். ""ஆவணம்"" தர சொல்லி பேங்கிற்கு ஆர்டர் போடுங்க ஆடு வித்தவன் கிட்டயும், மாடுவித்தவன் கிட்டயும் என்ன ஆவணம் கேட்க முடியும்???
தேர்தல் ஆணையம் சீர்திருத்தம் செய்ய முன் வர வேண்டும். ஒன்னு பண்ணலாம் தமிழ் நாட்டில் புரட்சி பண்ணி ஆட்சியை பிடிக்கப்போகிற """ஜோசப் விஜய்""" அவர்களிடம் கருத்து யோசனை கேட்டு செயல் படுத்தலாம்
யாரையாவது நீங்கள் தண்டித்திருந்தால் இனி வரும் தேர்தல்களில் தவறுகளை செய்ய மாட்டார்கள். பணம், நகை என்று அனைத்தையும் கருவூலத்தில் கொடுத்து விடுகிறீர்கள். புதிய அரசு வந்ததும் அதை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அது நியாயமான சிலவா என்பதை அவரவர்கள் தான் கண்டு பிடிக்க முடியும்.
திராவிட ஆட்சியில் பாலாரும் தேனாருமாக ஓடிய தமிழகத்தில் இப்போது பண ஆறு ஓடுகிறது. சூப்பர்.
ட்ராமா பண்ணாதீங்க சார் இதுவரை எத்தனை தண்டனை வாங்கி கொடுத்தீங்க உங்கள் லட்சணம் தெரிந்த தெரிந்ததே வெட்கப்படணும் கண்ணுக்கு தெரிஞ்சே அவ்ளோ செஞ்சாங்க என்ன பண்ணினீங்க
இதுல சிக்குண அரசியல்வாதிக யார்?
எல்லாம் வியாபாரி பொதுமக்கள்
ஆட்டு ஏவாரி மாட்டு ஏவாரி
நவீன கொள்ளைக்கும் பல்
மிகவும் அருமை சம்பளம் கொடுக்கும் அரசாங்கத்திற்கு நேர்மையாக செயல்படுவதை போலவே, லஞ்சம் கொடுத்தவர்களுக்கும் நீங்கள் நேர்மையாக செயல்படுவீர்கள் என்று நம்புகிறோம். லஞ்சம் கொடுத்த அளவிற்கு அவர்களை பிடிக்க மாட்டீர்கள் என்ற நம்புகிறோம். நம்முடைய நாட்டின் நடுநிலை சட்டத்தின் படி, நீங்கள் நடுநிலையில் செயல்பட வாழ்த்துக்கள்...