வாக்காளர்களை அடையாளம் காணும் வழிமுறைகள்
ஊட்டி: மாநிலத்தில் வரும், 23ல் நடக்கும் சட்டசபை பொதுத் தேர்தலில் வாக்காளர்களை அடையாளம் காணும் செயல் முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
வாக்காளர்கள் தங்களது ஓட்டுரிமையை சுதந்திரமாக, தேவையான ஆவணங்களுடன் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களான, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகங்கள், மருத்துவ காப்பீடு அட்டை, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு அட்டை, டிரைவர் லைசென்ஸ், பான் கார்டு பயன்படுத்தலாம்.
மேலும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளர் வழங்கப்பட்ட திறன் அட்டை, பாஸ்போர்ட், புகை படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், சட்டசபை தேர்தலில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, மற்றும் தனித்துவமான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம். எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் ஓட்டளிக்கும் நாளில் ஏதாவது ஒரு அடையாள அட்டையை கொண்டு வருவது கட்டாயம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும்
-
கல்வி வளர்ச்சியில் தி.மு.க., அரசு பெரும் பங்காற்றியுள்ளது: தே.மு.தி.க., வெங்கடேசன்
-
சுவர் விளம்பரங்களுக்கு அனுமதி எண் வழங்க அலுவலர்கள் தீவிரம்
-
இரண்டாம் கட்டமாக ஓட்டுச்சாவடி பதிவு அலுவலர்களுக்கு பணி இடங்கள் தேர்வு
-
வி.சி.கட்சி வேட்பாளர் வன்னிஅரசு கவுன்சிலரிடம் ஆதரவு திரட்டினார்
-
எப்பொழுது வேண்டுமானாலும் என்னை சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம்: மாஜி அமைச்சர் சண்முகம் பிரசாரம்
-
கருணாநிதி வழியில் ஏழை குடும்பங்களில் பொருளாதார நிலையை கல்வி மூலம் உயர்த்தும் ஸ்டாலின் மஸ்தான் எம்.எல்.ஏ., பெருமிதம்