எல்லையோர மது கடைகள் :மூன்று நாட்கள் மூடல்

பந்தலுார்: கேரளா மாநிலத்தில் தேர்தல் நடக்க உள்ளதால், மாநில எல்லையோர டாஸ்மாக் மது கடைகள் மூன்று நாட்கள் மூடப்பட்டன.

கேரளா மாநிலத்தில் வரும், 9-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதனால், கேரளா மாநிலம் முழுவதும் நேற்று முதல், 9- ம் தேதி வரை மதுபான கடைகள், பார்கள், கள்ளு கடைகள் மூடப்பட்டன.

மேலும், தமிழக எல்லையோர பகுதியான பந்தலுார் அருகே நம்பியார்குன்னு, தாளூர், அய்யன்கொல்லி, எருமாடு, சேரம்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகளும், பார்களும், 7 முதல் 9-ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டது.

மது விலக்கு போலீசார் கூறுகையில்,'இந்த நாட்களில் வெளிமார்க்கெட்டில் மதுபானங்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

Advertisement