சிங்காநல்லுார் தொகுதியில்  அ.தி.மு.க., காங்., வேட்பு மனு

கோவை: சிங்காநல்லுார் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வேட்பாளர் ஜெயராம், காங். வேட்பாளர் ஸ்ரீநிதி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

ஜெயராம் வேட்பு மனுவில், தனது பெயரில் அசையும் சொத்து, ரூ. 87 கோடியே 86 லட்சத்து, 21 ஆயிரத்து 121 ரூபாய் மதிப்பில் இருப்பதாகவும், மனைவி கீதா பெயரில் 17 கோடியே 19 லட்சத்து 65 ஆயிரத்து 783 ரூபாய் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவரின் பெயரில் அசையா சொத்துகளாக இடம், வீடுகள் என, 59 கோடியே 85 லட்சத்து 67 ஆயிரத்து 262 ரூபாய் உள்ளது. மனைவி பெயரில் 7 கோடியே 38 லட்சத்து 39 ஆயிரத்து 877 ரூபாய் உள்ளது.

வங்கி, நிதி நிறுவனங்களுக்கு ஜெயராம் பெயரில் 66 கோடியே 54 லட்சத்து 90 ஆயிரத்து 533 ரூபாய் கடனும், மனைவி பெயரில் 10 கோடியே 50 லட்சத்து 33 ஆயிரத்து 840 ரூபாய் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவருக்கு பிறகு, மதியம் 12:30 மணியளவில், செல்லாண்டியம்மன் கோவிலில் வழிபட்ட பிறகு, தி.மு.க., கூட்டணி சார்பில், காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதி, வேட்புமனு தாக்கல் செய்தார்.

Advertisement