எஸ் கரிசல்குளம் கோயிலில் பங்குனி பொங்கல் விழா
மானாமதுரை:எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் பக்தர்கள் தீச்சட்டி,முளைப்பாரி எடுத்து அம்மனை வழிபட்டனர்.
இக் கோயிலில் கடந்த மாதம் 29ம் தேதி பங்குனி பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது.தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேக,ஆராதனை,பூஜை நடந்து வந்தது.
முளைப்பாரி வளர்க்கப்பட்டு கோயில் முன் தினமும் பெண்கள் கும்மி பாட்டு பாடியும் அம்மனை வழிபட்டு வந்தனர்.
பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் முளைப்பாரிகளை ஊர்வலமாக கொண்டு சென்று கோயில் முன் வைத்து கும்மி பாட்டு பாடினர். ஏற்பாடுகளை டிரஸ்டிகள் செர்டு பாண்டி,போதும் பொண்ணு மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோடைகாலம் தொடங்கியதால் குடிநீருக்காக அல்லாடும் மக்கள்
-
பழமையான கோவிலில் சிற்பங்கள் உடைப்பு
-
இன்று இனிதாக... (09.04.2026) சிவகங்கை
-
காட்சிப் பொருளாக அரசு கட்டடங்கள் வீணாகிறது: பல லட்சங்கள் செலவழித்து திறந்தும்
-
கோடையிலும் விற்பனை இல்லை தென்னை சார் தொழிலாளர்கள் தவிப்பு
-
போலீஸ் செய்திகள்:திண்டுக்கல்
Advertisement
Advertisement