பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
புதுடில்லி: பண மூட்டை சிக்கிய விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா செய்தார்.
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா, அங்குள்ள அரசு பங்களாவில் வசித்தார் . கடந்தாண்டு அவரது இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு பணியின் போது, வீட்டில் உள்ள ஓர் அறையில், எரிந்த நிலையில் ஐநூறு ரூபாய் நோட்டுகள் மூட்டை மூட்டையாக கண்டெடுக்கப்பட்டன. பின்னர் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு யஷ்வந்த் வர்மா மாற்றப்பட்டார்.
அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி , லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகளின் எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்தனர். இதை ஏற்ற ஓம் பிர்லா, விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டார். அதை ரத்து செய்யக்கோரி யஷ்வந்த் வர்மா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பார்லிமென்ட் குழு விசாரணையை தொடர நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
இதன்படி பார்லி விசாரணைக்குழு விசாரணை நடத்தியது. தற்போது குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஒரு உள் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். இது தொடர்பாக, பார்லிமென்டின் வாயிலாக அவரைப் பதவியிலிருந்து நீக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்த சூழலில் இன்று அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.
Too,too late.
லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு துறையினரால் கையும் பணமுமாக பிடிபட்டார் ஒரு அதிகாரி இரண்டு மாற்று துறை அதிகாரிகள் சாட்சியத்தோடு. நீதிமன்றம் அவரிடம் இருந்து பிடித்த ரூபாய் நோட்டில் ரசாயன பவுடர் இருந்ததை கையில் ரசாயன பவுடர் ஒட்டி இருந்ததை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என விடுதலை செய்துவிட்டது. வேலை செய்யாமலே பல லட்சம் ரூபாய் அரியர்ஸ் பதவி உயர்வு எல்லாம் பெற்றார். அந்த நீதிமான் வீட்ல சோதனை போட்டால் இதுபோல கட்டு கட்டாக கிடைக்கலாம்
நீதித்துறையில் ஊழல் மலிந்துவிட்டது என்று NCERT 8 ஆம் வகுப்புப் பாடநூல் சொன்னபோது கொதித்த நீதிபதிகள் தாமே முன்வந்து வழக்காக பதிந்து விசாரணை மேற்கொண்டனர் ........ இன்னும் சந்தேகம் வலுக்கிறது
நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழக்க இது போன்றவர்கள் காரணம். ,நீதித்துறையின் வழக்கமான தாமதத்தினால் இவர் தண்டனை பெற்று சிறைக்கு போக வாய்ப்பு இல்லை
NCERT BOOK AND SUPREME COURT
அடுத்த பாராளுமன்ற உறுப்பினர்
கையும் களவுமா பிடித்தாலும், நீதிபதி என்றால், நிறைய காலதாமதம் ஆகும் போல. பேட்டி வாங்கி தீர்ப்பில் கீழிருந்து, மேல் வரை யாரும் யோக்கியமானவர்கள் இல்லை போலும். இதில் என்னதான் விசாரணை செய்தாலும், உண்மை மக்களுக்காக வெளியே வரப்போவதில்லை. ஆடுடா ராஜா ஆடு
நீதித்துறையின் காலவரையறையற்ற கால தாமதம் தான் குற்றவாளிகளுக்கு கிடைக்கப்பெற்ற வரப்பிரசாதம்
Will investigation take place now?
இதுவரை விசாரணை எதுவும் இல்லை
வாழ்க இந்திய ஜனநாயகம் வாழ்க இந்திய நீதி பரிபாலனம்மேலும்
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை
-
மத்திய நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதா?: உண்மை என்ன?: திமுக வயிற்றில் ‛‛புளி''யை கரைக்கும் புள்ளி விபரம்