தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை
நமது நிருபர்
மதுரையில் இருந்து காரைக்குடிக்கு பிரசாரத்திற்காக சென்று கொண்டிருந்த போது, சிவகங்கை அருகே விஜய் பிரசார வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
@1brசிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடும் த.வெ.க., வேட்பாளர்களை ஆதரித்து காரைக்குடியில் இன்று விஜய் பிரசாரம் செய்கிறார். இதற்காக, சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு விஜய் வந்தார். பிறகு அவர் மதுரையில் இருந்து காரைக்குடிக்கு பிரசார வாகனத்தில் சென்றார்.
திருப்பத்தூர் அருகே விஜய் பிரசார வாகனத்தை இடைமறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பணம், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவை ஏதும் சிக்கவில்லை என்பதால் அவரை வாகனத்தை செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர். அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
வாசகர் கருத்து (3)
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
10 ஏப்,2026 - 14:55 Report Abuse
இது ஒண்ணும் திடீரெக்ஸ் சோதனை இல்லீங்கோ. ஷெட்யூல்டு சோதனைதாங்கோ. பறக்கும் படை ஏதோ வேலை செய்யுறாங்கோன்னு கணக்கு காமிக்கலாமுங்கோ. அர்ச்சனா பட்நாயக் அப்ரிஷியேட் பண்ணுமுங்கோ. 0
0
Reply
raja - ,
10 ஏப்,2026 - 13:53 Report Abuse
முதல்வர் வாகனத்தை சோதனை செய்யும் போது சல்லித்தனமாக ரவுடித்தனமாக செய்யும் தவெகவினர் வாகனத்தை சோதனை செய்வதில் என்ன தவறு 0
0
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
10 ஏப்,2026 - 14:51Report Abuse
ஏண் இப்படி அநியாயமா போய் சொல்றே. முதல்வருக்கு கார் இல்லையாமே . ஓசி காருலதானே போறாரேம . நீ என்னமோ அவுரு காருங்குறே. எங்களுக்கு காது குத்த முடியா . உனக்கே நீ குத்திக்கோ . 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement