மகளிருக்கு மீண்டும் தாலிக்கு தங்கம் :அ.தி.மு.க., வேட்பாளர் அரி வாக்குறுதி

திருத்தணி:''அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மகளிருக்கு வழங்கப்பட்டு வந்த தாலிக்கு தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டர் திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும்''என கோ. அரி வாக்குறுதி அளித்தார்.

திருத்தணி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.பி. கோ. அரி போட்டியிடுகிறார். இவர் நேற்று கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பள்ளிப்பட்டு ஒன்றியம், குமாரமங்கலம், கரிம்பேடு, சாமந்தவாடா, நெடியம், கொளத்துார் உள்ளிட்ட, 12 ஊராட்சிகளில், ஓட்டுகள் சேகரித்தார்.

கோ. அரி பேசியதாவது:

தமிழகத்தில் நம் வீட்டு பெண்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை. தி.மு.க., ஆட்சியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு, கஞ்சா போன்ற போதை பழக்கத்தை கட்டுப்படுத்த, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் கட்டுப்படுத்தப்படும்.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிருக்கு தாலிக்கு தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டர் போன்ற திட்டங்களை தி.மு.க., நிறுத்தி வை த்துள்ளது. ஆனால், அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால்,

மகளிர் உரிமை தொகை, 2000 ரூபாயாக உயர்த்தப்படும். மகளிருக்கு தாலிக்கு தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்படும். ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள், 100 நாள் வேலை திட்டம், 150 நாட்களாக உயர்த்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

★★

Advertisement