ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விட்ட கும்மிடி., அ.தி.மு.க., வேட்பாளர்

ஊத்துக்கோட்டை:அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியின் போது, ஏற்பட்ட நெரிசலில் சிக்கிய, 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு, அ.தி.மு.க., வேட்பாளர் சுதாகர் வழி ஏற்படுத்தி கொடுத்தார்.

கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக வி.சுதாகர் போட்டியிடுகிறார். இவர் கடந்த, 2ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்த, பின் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். பின் கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம் ஒன்றியங்களில் வேட்பாளர் அறிமுக கூட்டம் முடிந்த நிலையில், தற்போது தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், பூண்டி ஒன்றியம், கச்சூர் கிராமத்தில் அம்பேத்கர் சிலைக்கு நேற்று மாலை அணிவித்து, பின்னர் தேர்தல் அலுவலகம் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதன்பின் சீத்தஞ்சேரி கிராமத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் தொண்டர்கள் திரண்டனர். இதனால் திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அவ்வழியே, 108 ஆம்புலன்ஸ் வந்தது. இதைப் பார்த்த அ.தி.மு.க., வேட்பாளர் வி.சுதாகர், ஓடிச்சென்று கட்சியினர் உதவியுடன் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி ஏற்படுத்தினார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

★*



Advertisement