த.வெ.க., பிரசாரத்தில் 'அலப்பறை' ;நோயாளிகள், முதியோர் அவதி

சேலம்: தமிழக சட்டசபை தேர்தல் வேட்பு மனுதாக்கல் நிறைவடைந்த நிலையில், அனைத்து தொகுதிகளிலும், வீதி வீதியாக ஓட்டு கேட்கும் பிரசாரத்தை, வேட்பாளர்கள் தொடங்கியுள்ளனர். வழக்கம்போல், தி.மு.க., அ.தி.மு.க.,வினர் ஒலிபெருக்கியில் ஓட்டு கேட்பது, வீடுகளுக்கு செல்வதுமாக பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

ஆனால் சேலத்தில், த.வெ.க.,வினர் ஓட்டு கேட்க வரும்போது வாகனங்களில், 'சவுண்ட் பாக்ஸ்' வைத்து, அதில் விஜய் பாடல்களை ஒளிபரப்பி, மேள தாளங்களை வேகமாக ஒலிக்க செய்து பிரசாரம் செய்கின்றனர்.

அப்போது இளைஞர்களும், சிறுவர்களும் ஆட்டம் ஆடியபடியும், கத்தி களேபரம் செய்தும், விசில் அடித்தபடியும் செல்கின்றனர். இதனால் மருத்துவமனை, கோவில், பள்ளி என எந்த முக்கிய இடங்கள் வந்தாலும், அதுகுறித்து கவலைப்படாமல், இளைஞர்கள், 'அலப்பறை' செய்கின்றனர். பல இடங்களில் சிலம்பாட்டம், கராத்தே உள்ளிட்ட, 'வித்தை' காட்டும் இளைஞர் படையும் செல்கிறது. இதனால் வீடுகளில் உள்ள நோயாளிகள், முதியோர் அவதிக்கு ஆளாகின்றனர்.

Advertisement