அ.தி.மு.க., வேட்பாளருடன் பா.ம.க., மகளிரணி பிரசாரம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் அ.தி.மு.க., வேட்பாளருடன், பா.ம.க., மகளிரணியினர் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் நடந்து வருகிறது. இக்கோவிலுக்கு வந்த அ.தி.மு.க., வேட்பாளர் விஜயா சுரேஷ்பாபுவிற்கு, விழுப்புரம் நகர பா.ம.க., மகளிர் அணியினர் வரவேற்பு அளித்தனர்.
சுவாமி தரிசனம் செய்த வேட்பாளர், பா.ம.க., மகளிர் அணியினருடன் வீடு, வீடாகச் சென்று, திண்ணை பிரசாரம் செய்து, கடந்த அ.தி.மு.க., அரசின் சாதனைகள், தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரங்களை வழங்கி ஓட்டு சேகரித்தார்.
பா.ம.க., நகர செயலாளர் வேலு, மகளிரணி சக்தி ஜெகதீசன், கலை, நிர்வாகிகள் சோமு, ஏழுமலை, செந்தில், சீனுவாசன், புகழ், அறிவழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி; பிரேமலதா நம்பிக்கை
-
கஸ்டம்ஸ் சாலை விரிவுபடுத்தப்படும் ;அ.தி.மு.க.வேட்பாளர் உறுதி
-
அமைச்சர் கணேசன் ஓட்டு சேகரிப்பு
-
தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதாவிடம் தரும் கேள்விகள்
-
பைக் மீது அரசு பஸ் மோதி விபத்து ;கல்லுாரி மாணவர் கால் அகற்றம்
-
சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பு: 10 படகுகள் பறிமுதல்
Advertisement
Advertisement