பொறியியல் கல்லுாரி விளையாட்டு விழா

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கப்பியாம்புலியூர் ஏ.ஆர்.பொறியியல் கல்லூரியில் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.

கல்லுாரி தலைவர் மகாதேவன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். துணைத் தலைவர் குபேரன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் ராம்தாஸ் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் வித்யாலயா இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் ராஜிநாயர் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

தேசியக் கொடி, ஒலிம்பிக் கொடி மற்றும் கல்லுாரி கொடி ஏற்றி வைத்தனர். தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏந்தப்பட்டு மாணவர்கள் அணிவகுப்பு நடந்தது. தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Advertisement