காரைக்குடியில் ' ரோடு ஷோ' மூலம் ஓட்டு சேகரித்த விஜய்: தொண்டர்கள் வழிநெடுக வரவேற்பு
காரைக்குடி : சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அத்தொகுதி த.வெ.க., வேட்பாளர் டாக்டர் பிரபுக்கு ஆதரவாக அக்கட்சி தலைவர் விஜய் 'ரோடு ஷோ' மூலம் தேர்தல் பிரசாரம் செய்தார்.
மதுரையில் காலை 10:45 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து பிரசார வேனில் புறப்பட்ட விஜய் அங்கிருந்து காரைக்குடி நோக்கி வந்தார். காரைக்குடி பிரசார இடத்திற்கு மதியம் 2:34 மணிக்கு வந்தார். அங்குள்ள முத்துராமலிங்க தேவர் சிலையை வணங்கி, வேனில் 4 நிமிடம் மட்டுமே மக்களை சந்தித்து கைகளை அசைத்த விஜய் தொடர்ந்து வேனிலேயே புதுக்கோட்டை நோக்கி சென்றார்.
காரைக்குடி நகர் முழுவதும் வேனில் இருந்தவாரே பிரசாரம் செய்தார். காரைக்குடிக்குள் விஜய்யின் வாகனம் நுழைந்ததும், கையில் 'விசில்' சின்னத்தை ஏந்தியபடி நின்றபடிசென்றார். வேட்பாளர் பிரபு, விஜய்க்கு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் படத்தை அன்பளிப்பாக வழங்கினார். கோவிலுார் நான்கு ரோடு சந்திப்பில் சென்றபோது தொண்டர்கள் வேல் வழங்கினர். அப்போது மர்ம பொருள் ஒன்று அவரது தலையில் விழுந்து சென்றது.




காரைக்குடியில் விஜய்யை பார்க்க 5:00 மணிநேரம் காத்திருந்த நாகராஜன், சிவரஞ்சனி தாம்பதியின் ஒன்றரை வயது குழந்தை மயங்கியது. மாநகராட்சி அலுவல மாடியில் ஏறி நின்ற தொண்டர்களை போலீசார் அகற்ற முற்பட்டபோது, தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விஜய் தேர்தல் பிரசார பாதுகாப்பிற்கென சிவகங்கை எஸ்.பி., சிவபிரசாத் தலைமையில் கூடுதல் எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் என 850 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
இது குறித்து வேட்பாளர் டாக்டர் பிரபு கூறியதாவது, பிரசாரத்திற்கான நேரம் மதியம் 12:00 மணி முதல் 2:30 மணி வரை மட்டுமே ஒதுக்கினர். ஆனால், விஜய் மதியம் 2:38க்கு வந்ததால், பேசாமல் வேனிலேயே கையசைத்து விட்டு சென்றுவிட்டார் என்றார்.
வாசகர் கருத்து (7)
கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா
10 ஏப்,2026 - 16:52 Report Abuse
பொணம் ஏதும் விழலையா...? ஏன்னா... இந்த குரங்கு கூட்டம் மரம், டிரான்ஸ்பர்மர் ஏறும்னு முன்னெச்சரிக்கை நடவடிக்கையா தகரத் தடுப்பு எல்லா போட்டு வச்சாங்க... அப்படியும் இந்த கிஷ்கிந்தா வானரக்கூட்டம் மரம் ஏறாம இருக்காது...? என்ன பண்றது... வானரக் கூட்டத்தின் தலைவன் சுக்ரீவனும் ஒரு குரங்குதானே...? குரங்கு கூட்டத்தின் தலைவன் குரங்காய் தானே இருக்க முடியும்...? 0
0
Reply
Keshavan.J - Chennai,இந்தியா
10 ஏப்,2026 - 16:03 Report Abuse
விஜய்யின் நடத்தை எனக்கு வருத்தமளிக்கிறது. இவர் குறைந்தபட்சம் 30 முதல் 40 இடங்களையாவது வெல்வார் என்று நினைத்தேன். ஆனால், அவர் பிரச்சாரம் செய்யும் விதமும், பொதுவெளியில் அவரது ஆதரவாளர்களின் நடத்தையும் மிகவும் ஏமாற்றமளிக்கிறது. நாம் என்றென்றும் அதிமுக மற்றும் திமுக ஆட்சியுடன்தான் வாழ வேண்டுமா. இந்த இரண்டுமே ஊழல் கட்சிகள், எனக்கு எந்த ஒரு நம்பிக்கை ஒளியும் தென்படவில்லை. 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
10 ஏப்,2026 - 15:57 Report Abuse
இந்த அளவுக்கு கூட்டம் சேருவது வியப்பாக இருக்கு. பஞ்ச் டயலாக் பாலிடால்க்கு கூட்டமே வரலியே. என்னவா இருக்கும்? அப்பா என்னடான்னா மெட்ரோ ரயிலில் ஓட்டு யாசகம் கேக்க போயிட்டார். 0
0
Reply
Vijay D Ratnam - Chennai,இந்தியா
10 ஏப்,2026 - 15:45 Report Abuse
ஏப்ரல் கடைசி வாரத்தில் விஜயின் படம் ஹிட்டா அல்லது அட்டர் ஃப்ளாப்பான்னு தெரியத்தான் போவுது. பொறவு என்ன. 2029 பாராளுமன்ற தேர்தலில் மதவாத சக்தியை வீழ்த்துவோம், பாஜகவை அகற்றுவோம், ராகுலின் கரத்தை வலுப்படுத்துவோம்னு சொல்லிக்கொண்டு தவெக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் காட்சிகள் ஓரணியில் நிற்கும் பாருங்கள். மதமாற்ற மாஃபியா கும்பலும், கூலிபான்ஸ்சும் இந்த தேர்தலில் ஒழுங்கு மரியாதையா எங்க பேச்சை கேட்டுகிட்டு இருன்னு ஸ்டாலினுக்கு காட்டி திமுகவுக்கு பாடம் புகட்டுவார்கள். சுத்தமாக கைவிட மாட்டார்கள். 0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
10 ஏப்,2026 - 15:36 Report Abuse
மூணுசா வாலத்தான் லேட் என்பதை வெளிப்படையாக சொல்லும் நிலையில் இல்லை அய்யா சோசப் விசய்.. 0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
10 ஏப்,2026 - 15:12 Report Abuse
ஒருயிடத்துக்குக்கூட விஜய்யால் சரியான நேரத்துக்கு வரமுடியாதா..? 0
0
Reply
Dinesh Mani - ,
10 ஏப்,2026 - 15:10 Report Abuse
vote for TVK 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement