படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
கோவில்பட்டி: ''நான் தான் படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை தருகிறேன் என்று சொல்கிறேன். எப்படி தருகிறேன் என்று சொல்கிறேன் '' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
கோவில்பட்டியில் தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: டோக்கனும் 8 ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்பதை நம்புகிறாய். அவன் 10 ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்பதை நம்புகிறாய். பிரிட்ஜ் தருகிறேன் என்பதை நம்புகிறாய். தாலிக்கு ஒரு பவுன் தங்கம் தருகிறேன் என்பதை நம்புகிறாய். 2 ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்பதை நம்புகிறாய். 2500 ரூபாய் தருகிறேன் என்பதை நம்புகிறாய்.
நான் வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் தருகிறேன் என்று சொல்வதை நம்பு, ஒவ்வொரு குடும்ப பெண்ணுக்கும் ஒரு கிலோ தங்கம் தருகிறேன் என்பதை நம்பு, அப்பொழுது சிரிப்பு வருகிறது. ஏன் சிரிக்கிறாய்? ஏன்? கேவலமாக இருக்கிறதா? நான் தான் படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை தருகிறேன் என்று சொல்கிறேன். எப்படி தருகிறேன் என்று சொல்கிறேன்.
அப்பொழுது நீ நம்புவதில்லை. உலகத்தில் ஒவ்வொரு நாட்டிலும் எப்படி ஆட்சி நடக்கிறது. எப்படி பொருளாதாரத்தை மீட்டு எடுக்கிறான் என்று சொல்கிறேன். உன் பிள்ளை சொல்கிறேன், நீ நம்புவதில்லை, வந்தவன், போனவனை நம்புகிறாய். உன் வயற்றில் இருந்து வந்தவனை நம்புவதில்லை அங்கே தான் பிரச்னை. இவ்வாறு சீமான் பேசினார்.
கடைசியில் கருணாநிதியை போல இதயத்தில் சம்பளம் கொடுப்பேன் என்று சொல்லிடாதீங்க
Well said. They wont believe indigenous stuffs, including unimplemen assurances
சைமன் இப்ப ரியல் அரசியல் சாக்கடையில் இறங்கியாச்சி. இனிமே ஏறு முகந்தான். ராஜா நீ அள்ளி வுடு. முடிஞ்சா அந்த ஒரு கிலோ தங்கத்தை இன்னிக்கி நைட்லேயே பேங்குல போட்டுடு. நாளிக்கின்னா பாஜக வந்து தடுத்துடும். மேல விவரம் வேணுமின்னா திருட்டு தீயமுக கிட்டே கேட்டுக்கோ.ஆபத்துக்கு தோஷமில்லை.
அரசியல் வாதிகளின் ஆச்சரியமான வாக்குறுதிகளால் தமிழக நாசம்
அண்டபுளுகன், ஆகாச புளுகன் என்பதா, அல்லது மற்ற கட்சிகள் தரும் வாக்குறுதிகளை ஏளனம் செய்கிறாரா. யாரும் எதுவும் எதிர்த்து கேள்விகள் கேட்க மாட்டார்களா.
நிச்சயமா மத்த கட்சிகளின் இலவச ஆஃபர்களை மோசமா கிண்டல் பண்றான்.
மத்தவங்க சொல்றது மட்டும் நடைமுறைக்கு சாத்தியமா??
வாயால் வடைசுடுவதில் இவர் துக்ளக்காரை மிஞ்சிவிட்டார் .......
சீமான் அவர்கள் எந்த ஒரு சாத்தியமில்லாத விஷயத்தையும் கூறவில்லை அவருடைய கட்சி பெரும்பான்மை பலத்துடன் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அவர் சொல்வதெல்லாம் சாத்தியப்படுத்த முடியும் மேலும் அவர் எந்த ஒரு இடத்திலும் அவருடைய அரசாங்கம் கொடுக்கும் அரசு வேலைகளுக்கு இப்போதுள்ள இந்த உயர்வு விகித சம்பளமும் பென்சனம் தொடர்ந்து வழங்கப்படும் என்று குறிப்பிடவில்லை அரசு ஊழியர்கள் அனைவரும் கடுமையாக உழைத்து அரசாங்கத்திற்கு லாபம் ஈட்டி கொடுத்து அதன்பின்பு தகுதியான சம்பளமும் பென்சனம் பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான் அவரது திட்டமாக இருக்கும் இப்பொழுதுள்ள அரசு ஊழியர்களின் சூப்பர் டீலக்ஸ் சொகுசு ஊழல் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்து குழப்பிக் கொள்ளாதீர்கள்