மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
கோல்கட்டா: மேற்குவங்கத்தில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என பாஜ தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து உள்ளது.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கிறது. இன்று பாஜவின் தேர்தல் வாக்குறுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். அதன் விபரம் பின்வருமாறு:
* பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
* ஆட்சி அமைத்த 6 மாதங்களுக்குள் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.
* மேற்குவங்க எல்லை வழியாக பசு மாடு கடத்தப்படுவதை தடுப்போம்.
* ஊடுருவல்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* மேற்குவங்க மாநிலத்தின் வளமான கலாசார பாரம்பரியத்தைப் பரப்ப அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
* மேற்குவங்க மாநில அரசின் அனைத்துப் பணிகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்படும்.
* வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் நிதியுதவி.
* மேற்குவங்கத்தில் நான்கு புதிய நகரங்கள் உருவாக்கப்பட உள்ளன.
* போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு ரூ.15,000; ஊழல் காரணமாக வேலை இழந்தவர்களுக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வு.
* ரவீந்திரநாத் தாகூர் பெயரில் கலாசார மையம் அமைக்கப்படும்.
வாக்குறுதிகளை வெளியிட்ட பிறகு, அமித்ஷா பேசியதாவது: மேற்குவங்க மாநிலத்தின் இருண்ட காலத்தை நீக்கி, வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்றுவதே இலக்கு. இந்த தேர்தல் அறிக்கை, பிரதமர் மோடி கனவு காணும் வளர்ந்த இந்தியாவிற்கான செயல் திட்டம். மக்கள் அச்சத்திலும் விரக்தியிலும் உள்ளனர். மக்கள் மனப்பூர்வமான மாற்றத்தை விரும்புகிறார்கள். பொய்யான வாக்குறுதிகள் மற்றும் ஊடுருவல்காரர்களுடனான தொடர்பு காரணமாகவே முதல்வராக மம்தா பானர்ஜி மூன்று முறை பதவியேற்றார்
கம்யூனிச அரசை அகற்றுவதற்காக, மேற்குவங்க மக்கள் முதல்வர் மம்தா பானர்ஜியை தேர்ந்தெடுத்தனர். 5 ஆண்டுகள் போதாது என்று கூறிய அவருக்கு, மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், கும்பல்கள், குண்டர்கள் மற்றும் ஊடுருவல்காரர்களின் உதவியுடன், அவர் மூன்றாவது முறையாகவும் ஆட்சியைப் பிடித்தார். இன்று, ஒரு காலத்தில் மம்தாஜியை ஆதரித்த அதே மக்கள் அச்சமும் ஏமாற்றமும் அடைந்து, மாற்றத்தை நாடி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில், நாங்கள் ஒரு வலுவான எதிர்க்கட்சியாக எங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளோம். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
உலகம் திரும்பி பார்க்கிற இந்த இந்துமத துரோக இந்துமத விரோத மானங்கெட்ட திராவிட திருமங்கல ஃபார்முலா
இந்தியா முழுக்க படித்த இளைஞர்கள் கேட்பது இலவசங்கள் வேண்டாம் வேலைவாய்ப்பு தாருங்கள் என்று ஆனால் இதுபோன்ற அறிவிப்புகள் இல்லாமல் வெற்றி பெற முடியாது என்ற கலாச்சாரம் இந்தியா முழுக்க பரவுவது அடித்தட்டு மக்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலையை உருவாக்குகிறது. தரமான உலகத்தரம் வாய்ந்த கல்வி எப்போது இலவசமாக மக்களுக்கு கிடைக்கின்றதோ அப்போது தான் இந்த நிலை மாறும்.
ஒரு மாநிலத்துல திதியை விரட்ட வெண்டும்... இன்னொரு மாநிலத்துல தத்தியை விரட்ட வேண்டும். இந்த மாதிரி வாக்குறுதி இப்போது அவசியம் தான்.
நீங்க சமுக நீதினு சொல்லிட்டு நிதி கொடுக்க ஆரம்பிச்சி வச்சதுதானே இப்போ இந்தியா பூரா பரவி கிடக்குது......நீங்க கொடுத்தா அது சமுக நீதி மத்தவங்க கொடுத்த கேவலமா......
வாய்க்கு வந்த எமவுன்ண்ட்ட அடிச்சி உடுங்க. நீங்க செஞ்சா அது தேஷ்பக்தி.
அப்பாவிக்கு கொடுத்தா நேரா ஓடி டாஸ்மாக் போயிடும்...சரிதானே அப்பாவி
பி ஜே பி யுமா இப்படி. விளங்கிடும். பதவி ஆசை படுத்தும் பாடு
மகாதேவா... இதை அண்டா வாங்க வரிசையில் நிற்கும்போது யோசிக்கணும்மேலும்
-
சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சிகள்
-
மானாமதுரையில் சித்திரை திருவிழா :வைகை ஆற்றுக்குள் ராட்டினங்கள்
-
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியருக்கு ஓய்வூதிய உயர்வு தொகை இழுபறி ; சங்கங்கள் புகார்
-
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி மையம் திறப்பு
-
அவசியம் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதில் விழிப்புணர்வு அலட்சியத்தால் 4 தடுப்பூசிகளை செலுத்தாத அவலம்
-
கலெக்டர் ஆபீசில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி