சித்தராமையா மீண்டும் முதல்வராவார் அமைச்சர் ஜமீர் அகமது பேச்சால் சர்ச்சை
பெங்களூரு: 'சித்தராமையா, 2028ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு பின்னரும், மூன்றாவது முறையாக முதல்வராவார்' என, வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறியது, காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பல தலைவர்கள் ஜமீர் மீது அதிருப்தியில் உள்ளனர்.
கர்நாடகாவில் முதல்வர் பதவி தொடர்பான சர்ச்சை, தற்காலிகமாக நின்றுள்ளது. பாகல்கோட், தாவணகெரே தெற்கு தொகுதிகளின் இடைத்தேர்தல் நடப்பதால், முதல்வரும், அமைச்சர்களும் அதில் ஆர்வம் காட்டுகின்றனர். இடைத்தேர்தல் முடிந்த பின், சிவகுமாரை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.,க்கள், டில்லிக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். சிவகுமாரை முதல்வர் பதவியில் அமர்த்தும்படி, மேலிடத்துக்கு நெருக்கடி கொடுக்கவும் தீர்மானித்துள்ளனர்.
இதற்கிடையே, அமைச்சர் ஜமீர் அகமது கான், 'மாநிலத்தில் முதல்வர் மாற்றம் இல்லை. சித்தராமையா, 2028 சட்டசபை தேர்தலுக்கு பின்னரும், மூன்றாவது முறையாக முதல்வராவார்' என்று கூறியது காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன் ராஜண்ணா, அவ்வப்போது முதல்வர் பதவி குறித்து பேசி, கோஷ்டி பூசலை ஏற்படுத்த முயற்சித்தார். சரியான நேரம் பார்த்து, அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வைத்ததில், ஒரு கோஷ்டி வெற்றி அடைந்தது. இப்போது, ஜமீர் அகமது கானும், அவ்வப்போது சித்தராமையாவுக்கு ஆதரவாக பேசுகிறார்.
இவர் ம.ஜ.த.,வில் இருந்து, காங்கிரசுக்கு வந்தவர். இங்குள்ள முஸ்லிம் தலைவர்களை விட, அதிகமான வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. கட்சியில் தானே சிறுபான்மை தலைவர். தான் இல்லாவிட்டால் காங்கிரசுக்கு தன் சமுதாய ஓட்டுகள் கிடைக்காது என்ற மனப்போக்கில் நடந்து கொள்வது, மற்ற தலைவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது முதல்வர் பதவி குறித்து பேசி, கட்சியில் சர்ச்சைக்கு காரணமாகி உள்ளார். இவர் மீது புகார் அளிக்க, சில தலைவர்கள் டில்லிக்கு செல்லவுள்ளனர். 'மேலிட தலைவர்கள் பலமுறை எச்சரித்தும், ஜமீர் வாயை அடக்கவில்லை. தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளை கவனிப்பதை விட, மற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்கிறார். முதல்வர் பதவி குறித்து பேசி குழப்பத்தை ஏற்படுத்துகிறார். அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்' என, மேலிடத்துக்கு நெருக்கடி கொடுக்க, சிவகுமாரின் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
மேலும்
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
-
தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை