பி.எஸ்.என்.எல்., புதிய தலைமை அதிகாரியாக திலகவதி பொறுப்பேற்பு

சென்னை: பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் சென்னை வட்ட தலைமை பொது மேலாளராக திலகவதி பொறுப்பேற்றுள்ளார்.

இவர் 1989ம் ஆண்டு இந்திய தொலைத்தொடர்பு சேவையில் இணைந்தவர். கிண்டி பொறியியல் கல்லுாரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் பட்டம் பயின்றுள்ளார்.

கடந்த 1990-ஆம் ஆண்டில் 'ஸ்டீல் ஆத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட்' நிறுவனத்தின் பணியை துவங்கி, சென்னை வட்ட பி.எஸ்.என்.எல்., பிரிவில் உதவி மண்டல பொறியாளராக பணியாற்றியுள்ளார்.

புதிய தொழில்நுட்ப தொலைபேசி, 'ஸ்விட்சிங் சிஸ்டம்'களை நிறுவுவதில் முக்கிய பங்காற்றினார்.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் துணை பொது மேலாளராகவும், புதுச்சேரியில் முதன்மை பொது மேலாளராகவும் பணியாற்றி உள்ளார்.

பதவி உயர்வு பெற்று, தற்போது சென்னை வட்ட தலைமை பொது மேலாளராக பொறுப்பேற்றுள்ளார்.

Advertisement