சோழிங்கநல்லுாரில் மாற்றத்தை கொண்டுவர அ.தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க கந்தன் பிரசாரம்
புழுதிவாக்கம்: ''பத்தாண்டுகளாக பின் தங்கியுள்ள சோழிங்கநல்லுார் தொகுதியில் மாற்றத்தை கொண்டுவர, அ.தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க வேண்டும்,'' என, வேட்பாளர் கந்தன் புழுதிவாக்கத்தில் ஆதரவு திரட்டினார்.
சோழிங்கநல்லுார் தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளராக, முன்னாள் எம்.எல்.ஏ., கந்தன் போட்டியிடுகிறார். தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன், வீடு வீடாக சென்று, ஆதரவு திரட்டி வருகிறார்.
கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, நன்மங்கலம், உள்ளகரம் போன்ற பகுதிகளில், ஏற்கனவே பிரசாரத்தை முடித்த நிலையில், புழுதிவாக்கம் பகுதியில் நேற்று, தி.மு.க., ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டி, ஓட்டு கேட்டார்.
அப்போது, அ.தி.மு.க., அறிவித்துள்ள, ஆட்டோ வாங்க 75,000 ரூபாய் மானியம் என்ற வாசகம் அடங்கிய பதாகை ஏந்தி, ஆட்டோ ஓட்டுநர்கள் அவருக்கு, உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, வாக்காளர்களிடம் கந்தன் பேசியதாவது:
புழுதிவாக்கம் சித்தேரி, அய்யப்பா நகர் ஏரிகளை, நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது துார்வாரி, நடைபாதை அமைத்து, சுற்றுலா தளமாக மாற்றினேன். தற்போது, அவை பராமரிப்பின்றி பொலிவிழந்துள்ளன.
இதேபோல், அ.தி.மு.க., கொண்டு வந்த பல வளர்ச்சி பணிகள் கிடப்பில் போடப்பட்டு, 10 ஆண்டுகளாக பின் தங்கியுள்ள சோழிங்கநல்லுார் தொகுதியில் பல மாற்றங்களை ஏற்படுத்த, இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டளியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்வில், பகுதி கழக செயலர் பழனிவேல், 197வது வட்டக் கழக செயலர் சங்கர், 197வது வார்டு கவுன்சிலர் மேனகா சங்கர், பா.ஜ., மாவட்ட தலைவர் குமார் மற்றும் பா.ம.க., மாவட்ட செயலர் நிர்மல் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும்
-
கடும் குடிநீர் தட்டுப்பாடு லாரிகளில் விநியோகிக்க கோரிக்கை
-
அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி; பிரேமலதா நம்பிக்கை
-
கஸ்டம்ஸ் சாலை விரிவுபடுத்தப்படும் ;அ.தி.மு.க.வேட்பாளர் உறுதி
-
அமைச்சர் கணேசன் ஓட்டு சேகரிப்பு
-
தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதாவிடம் தரும் கேள்விகள்
-
பைக் மீது அரசு பஸ் மோதி விபத்து ;கல்லுாரி மாணவர் கால் அகற்றம்