தொகுதி மக்கள் என்னை எளிதாக சந்திக்கலாம் மங்கலம் தி.மு.க., வேட்பாளர்  ரங்கன் உருக்கம்

2

புதுச்சேரி: மங்கலம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் ரங்கன் தொகுதி முழுதும் உதய சூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

இண்டி கூட்டணியில் மங்கலம் தொகுதியில் தி.மு.க., வேட்பளராக ரங்கன் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுதும் வீடு வீடாக சென்று உதய சூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வருகிறார்.

நேற்று தொகுதி முழுவும் ஓட்டு சேகரித்த, வேட்பாளர் ரங்கன் பேசுகையில், 'நான் சாம்பசிவம் ரெட்டியார் அறக்கட்டளை துவக்கி மங்கலம் தொகுதி முழுதும் அறக்கட்டளை மூலம் சமூக பணிகளை செய்து வருகிறேன்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், எனக்கு மங்கலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளார்.

நான் தொகுதிக்குட்பட்ட கிராமத்தில் வசிப்பதால் என்னை நீங்கள் எளிமையாக சந்தித்து தங்கள் குறைகளை தெரிவித்தால் உடனடியாக நிவர்த்தி செய்து தருவேன்.

இத்தொகுதியில் என்னை வெற்றி பெற செய்தால் நீங்கள் அழைத்த குரலுக்கு ஓடியோடு வந்து சேவை செய்ய உள்ளேன். புதுச்சேரியில் இண்டி கூட்டணி ஆட்சி நிச்சயமாக அமையும். அதனால் நீங்கள் எனக்கு உதய சூரியன் சின்னத்தில் ஓட்டு போட்டு என்னை வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும்.

நான் வெற்றி பெற்றால் மங்கலம் தொகுதியை வளர்ச்சி பெற்ற தொகுதியாக மாற்றி காட்டுவேன்.

இங்கு விவசாயிகள் அதிகளிவில் வசிக்கின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசிடம் பெற்று தருவேன்.

இதேபோல் அனைத்து பிரிவு மக்களுக்காகவும் பாடுபடுவேன்' என்றார்.

Advertisement