மாமனாரை கொன்ற மருமகன் கைது
ஆம்பூர்: திருப்பத்துார் மாவட்டம், தேவலாபுரத்தை சேர்ந்தவர் ரவி, 56. இவரது மகள் கிருத்திகா, 30. அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சதீஷ்குமார், 33. இவர், கிருத்திகாவை, இரண்டாவதாக திருமணம் செய்தார்.
இவர்களுக்கு, நான்கு வயதில் மகன் உள்ள நிலையில், ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தை என்பதால், மனைவியிடம் சதீஷ் தகராறு செய்தார். கிருத்திகா கோபித்து கொண்டு, தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
ஏப்., 3 இரவு, ரவி வீட்டிற்கு சென்ற சதீஷ்குமார், அவரிடம் தகராறில் ஈடுபட்டு, நாட்டு துப்பாக்கியால் சுட்டதில், அவர் உயிரிழந்தார். தப்பிய சதீஷ்குமாரை, உம்ராபாத் போலீசார், நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருவிழாவில் தினமும் அம்மன் திருவீதி உலா
-
ஆடிவெள்ளி, தை வெள்ளி சிறப்பு
-
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்: கிலோ ரூ. 157.99 க்கு விற்பனை
-
நன்மைகளை வழங்கும் பவுர்ணமி பூஜை
-
அணையில் மதகுகள் மாற்றும் பணி: இம்மாத இறுதிக்குள் நிறைவடையும்
-
கிணத்துக்கடவை புறக்கணிக்கும் வேட்பாளர்கள்; பிரச்னைகளோடு காத்திருக்கும் மக்கள்
Advertisement
Advertisement