ஆண்டுக்கு இருமுறை மட்டுமே சி.ஏ., தேர்வு
சென்னை:ஒவ்வொரு ஆண்டும் மூன்று முறை தேர்வு நடத்திய, இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம், அதை இரண்டாக குறைத்துள்ளது.
இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனமான, ஐ.சி.ஏ.ஐ., பட்டய கணக்காளர் தேர்வில் மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி, ஜனவரி, மே, செப்டம்பர் மாதங்களில் நடத்தப்பட்டு வந்த, பட்டய கணக்காளர் தேர்வுகள், இனி, மே, நவம்பர் மாதங்களில் மட்டும் நடத்தப்படும்.
இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்த ஆண்டு முதல் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தியதை ஏற்று, இரண்டு இறுதித் தேர்வுகளை மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், தேர்வுக்கான தயாரிப்பு, திருப்புதல், திட்டமிடல் உள்ளிட்ட செயல்பாடுகளில், நிதானத்துடன் செயல்படுவதுடன், அடிக்கடி தேர்வு எழுதுவதால் ஏற்படும் சோர்விலிருந்தும் விடுவிக்கப்படுவர். மாணவர்களால் கருத்து தெளிவு, ஆழமான ஆய்வு ஆகியவற்றில் கவனம் செலுத்த முடியும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
சவூதி - பஹ்ரைன் இடையிலான கிங் பஹத் பாலம் மீண்டும் திறப்பு!
-
உண்மையான காங்கிரஸ் நம் பக்கம் நிற்கிறது; நெல்லை பிரசாரத்தில் விஜய் பேச்சு
-
திருப்பரங்குன்றம் வழக்கு; தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத்தடை
-
நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள்; எச்சரிக்கிறார் ரஜினி
-
தேர்தல் ஆணையம் மீது புகார் கூறாத ஸ்டாலின்: புகார்களை அடுக்கும் மம்தா: எதிர்க்கட்சிகளுக்குள் ஏன் இந்த வேறுபாடு?
-
மக்களை பற்றி கவலையில்லை; குடும்பத்தை பற்றி மட்டுமே கவலை: முதல்வர் மீது இபிஎஸ் குற்றச்சாட்டு