கருவின் பாலினம் கூறிய 2 பெண்கள் சிக்கினர்

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், ரங்காபுரத்தில், கருவிலுள்ள குழந்தை பாலினம் கண்டறியும் கும்பல் செயல்பட்டு வருவதாக மாவட்ட சுகாதார துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன், பென்னாகரம் போலீசார் ரங்காபுரம் ‍சென்றனர்.

அங்கு, பரிமளா, 34, வீட்டில் சோதனையிட்டதில் பாலினத்தை கண்டறிந்து சொல்லும் உபகரணங்கள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் இருந்தன.

அவர், டிப்ளமோ நர்சிங் படித்து விட்டு, ஆதனுாரை சேர்ந்த சாந்தி, 47, என்பவருடன் சேர்ந்து, சட்ட விரோதமாக கருவிலுள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறி வந்துள்ளார். இதையடுத்து, இரு பெண்களையும் பென்னாகரம் போலீசார் கைது செய்தனர்.

Advertisement