அ.தி.மு.க.,வும் தி.மு.க.,வும் ஒன்றாகி விட்டதா சசிகலா கேள்வி
மதுரை: தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மதுரை மாவட்டத்தில் நேற்று பிரசாரம் செய்த சசிகலா பேசியதாவது:
தமிழகத்தில் ஆட்சி நடத்துபவர்கள் சரியில்லை. தலைமைக்கு வேண்டிய மூன்று அமைச்சர்களிடம் தான் எந்த துறையில் முடிவெடுக்க வேண்டுமானாலும், ஒப்புதல் பெற வேண்டும். இதுதான் தி.மு.க., ஆட்சியில் நடக்கிறது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் எங்கள் கூட்டணி வேட்பாளரை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஒருவர், ஆள் வைத்து கடத்திச் சென்று அடித்திருக்கிறார். இப்போது நடப்பது, தி.மு.க., ஆட்சி. அப்படி என்றால், இரண்டு கட்சியினரும் ஒன்றாகி விட்டீர்களா?
தமிழகத்தில், எங்கு பார்த்தாலும், 'மனமகிழ் மன்றம்' என்ற பெயரில் நீதிமன்றத்தை ஏமாற்றி, தி.மு.க., ஆட்களையே வைத்து மதுக்கடை நடத்து கிறார்கள்.
இவ்வாறு சசிகலா பேசினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோடைகாலம் தொடங்கியதால் குடிநீருக்காக அல்லாடும் மக்கள்
-
பழமையான கோவிலில் சிற்பங்கள் உடைப்பு
-
இன்று இனிதாக... (09.04.2026) சிவகங்கை
-
காட்சிப் பொருளாக அரசு கட்டடங்கள் வீணாகிறது: பல லட்சங்கள் செலவழித்து திறந்தும்
-
கோடையிலும் விற்பனை இல்லை தென்னை சார் தொழிலாளர்கள் தவிப்பு
-
போலீஸ் செய்திகள்:திண்டுக்கல்
Advertisement
Advertisement