தி.மு.க., ஆட்சிக்கு முடிவு நெருங்கி கொண்டிருக்கிறது வில்லிவாக்கத்தில் அ.தி.மு.க., விஜயகுமார் நம்பிக்கை
சென்னை: ''சட்டசபை தேர்தலுக்கு பின், தி.மு.க., ஆட்சிக்கு நிரந்தர முடிவு நெருங்கி கொண்டிருக்கிறது,'' என, வில்லிவாக்கம் அ.தி.மு.க., வேட்பாளர் விஜயகுமார் உறுதியளித்தார்.
சட்டசபை தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், வில்லிவாக்கம் தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளராக, மத்திய சென்னை முன்னாள் எம்.பி., விஜயகுமார், ஓட்டு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்.
நேற்று காலை, தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார் நலச்சங்கம், துாய்மை பணியாளர் நலச்சங்கம் நிர்வாகிகளை, விஜயகுமார் நேரில் சந்தித்து, ஆதரவு கோரினார்.
தொடர்ந்து, தலைமை தேர்தல் பணிமனையில், கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், வேட்பாளர் விஜயகுமார், ''விடியா தி.மு.க., ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு முழுவீச்சில் செயல்பட வேண்டும்,'' என, கட்சியினக்கு ஊக்கமளித்து பேசினார்.
பின், 104வது வார்டுக்கு உட்பட்ட திருமங்கலம் பிரதான சாலையில் பிரசாரத்தை துவக்கினார். அங்கிருந்து, நாவலர் நகர், தென்றல் காலனி, வசந்தம் காலனி, முல்லை நகர், ஐஸ்வரியா குடியிருப்பு, உதயம் காலனி, அன்பு காலனி உள்ளிட்ட இடங்களில், வீடு வீடாக சென்று மக்களிடம் ஓட்டு சேகரித்தார்.
அப்போது, விஜயகுமார் பேசியதாவது:
மக்களின் அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்யாத தி.மு.க., ஆட்சிக்கு, மக்கள் முடிவு கட்ட வேண்டும். திருமங்கலம் பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வரும் மின்சார பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் கொண்டுவரப்பட்ட மினி பஸ் திட்டம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
அந்த திட்டத்தை மீண்டும் முழுமையாக செயல்படுத்தி, 18வது பிரதான சாலையில் நிறுத்தப்பட்ட மினி பஸ் சேவையை, மீண்டும் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தொகுதியில் பிரதான சாலைகளை ஆக்கிரமித்துள்ள நடைபாதை கடைகள் அகற்றப்பட்டு, மாற்று இடங்களில் வைத்து ஒழுங்குபடுத்தப்படும். தி.மு.க.,வின் குடும்ப ஆட்சியை ஒழித்து, மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான ஆட்சி வழங்கப்படும்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்த மோசடி ஆட்சியை மனதில் வைத்து, மக்கள் நல்ல முடிவை எடுப்பர். பணத்தை வைத்து, வேட்பாளர்களை எடை போடமாட்டார்கள்; மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்கள் மீது, நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்வில், தொகுதி பொறுப்பாளர்கள் செல்வம், ரஞ்சித் பெர்னான்டோ மற்றும் பகுதி கழக செயலர் கோகுல் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அப்பாஸ், மகேஷ், அபிராமி பாலாஜி ஆகியோர் இருந்தனர்.
மேலும்
-
வேகத்தடை அமைக்க கோரிக்கை
-
தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி 'மாஜி' அமைச்சர் ஆருடம்
-
மனைவி பிரிந்த ஏக்கம் கணவர் தற்கொலை
-
உருளையன்பேட்டை தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் இறுதி பிரசாரம்
-
என்.ஆர்.காங்., வேட்பாளர் பாகூரில் ஓட்டு சேகரிப்பு
-
தொகுதி மக்கள் என்னை எளிதாக சந்திக்கலாம் மங்கலம் தி.மு.க., வேட்பாளர் ரங்கன் உருக்கம்