ஃபோரக்ஸ்: ஊக வணிகம் குறைந்ததால் நிலைபெற்ற ரூபாய்
இந்தியாவை பொறுத்தவரை, கச்சா எண்ணெய் விலை குறைவு மற்றும் டாலர் பலவீனம் ஆகிய இரண்டுமே மிக முக்கியமானவை. எண்ணெய் விலை குறைவதால், நாட்டின் இறக்குமதி செலவு குறையும்; அதேநேரம், டாலரின் பலவீனம், இந்திய ரூபாயின் மதிப்பை வலுப்படுத்த உதவும்.
ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கைகளால், ரூபாயின் மதிப்பு, தொடர்ந்து நான்கு வர்த்தக நாட்களாக லாபத்தை பதிவு செய்துள்ளது.
வங்கிகள் தங்களின் வர்த்தக நிலைகளை மறுசீரமைக்க, ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவிருப்பதால், வங்கிகள் வெளிநாடுகளில் வைத்திருந்த தங்களின் டாலர் இருப்புகளை விற்பனை செய்து வருகின்றன.
வங்கிகளின் இந்த தொடர் டாலர் விற்பனை வாயிலாக, சந்தையில் நிலவி வந்த ஊக வணிகம் குறைந்து ரூபாயின் மதிப்பு ஸ்திரமடைந்துள்ளது.
ரூபாய் மதிப்பு 92.80 முதல் 93.00 வரை இருந்த வலுவான ஆதரவு நிலையை உடைத்து கொண்டு முன்னேறியுள்ளது. 92.50 என்ற நிலைக்கு கீழ் தொடர்ந்து நிலைபெற்றால், அது மேலும் வலுவடைந்து 91.80 முதல் 92.00 என்ற நிலையை நோக்கி செல்ல வாய்ப்புள்ளது. ஒருவேளை ரூபாயின் மதிப்பு குறையத் தொடங்கினால், அது 93.20 முதல் 93.50 என்ற வரம்பில் நிலை பெறலாம்.
மேலும்
-
7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வரும் ஈரானின் கச்சா எண்ணெய் கப்பல்கள்
-
ஏப்., 15ல் நாகர்கோவிலில் பிரதமர் மோடி 'ரோடு ஷோ'
-
மாவட்டத்தில் ஓட்டுப்பதிவிற்கான முன்னேற்பாடு பணி தீவிரம் ஓட்டுச்சாவடிகளில் 2790 கேமராக்கள் பொருத்த ஏற்பாடு
-
கர்நாடகாவில் காகிதமில்லா சட்டசபை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
-
சந்தை நிலவரம்: தங்கம் வெள்ளி
-
பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுமுறை அனைத்து மனுக்களும் ஏற்பு: 15ல் விசாரணை