பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து: தி.மு.க., - எம்.பி.,க்கு கடும் கண்டனம்
சென்னை: பாகிஸ்தானுக்கு ஆதரவாக தி.மு.க., - எம்.பி., சல்மா, 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவுக்கு, பல தரப்பினரிடமும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ள தி.மு.க.,வைச் சேர்ந்த சல்மா, 'பாகிஸ்தானின் தலையீட்டால், ஈரான் மீதான போர் நின்றிருக்கிறது.
சங்கிகள் எப்படி ஜீரணிக்கப் போகிறீர்கள்' என, பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையில், 'எக்ஸ்' தளத்தில் நேற்று கருத்து பதிவிட்டிருந்தார்.
எம்.பி.,யாக உள்ள ஒருவர் நம் நாட்டின் பிரதமரை கிண்டல் செய்யும் வகையிலும், நம் நாட்டில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு மூளையாக செயல்படும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கருத்து பதிவிட்டதற்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை அளித்த பேட்டி:
இதே கருத்தை பா.ஜ.,வினர் ஏதாவது மதம் சார்ந்து சொல்லி இருந்தால், எந்த அளவிற்கு இவர்கள் எல்லாம் கண்டனம் தெரிவிப்பர். ஆனால், அவர்களின் வேலையே இது தான்.
தி.மு.க., என்றால் வடக்கு, தெற்கு; அந்த மாநிலம், இந்த மாநிலம்; அந்த மொழி, இந்த மொழி; இந்த நாடு, அந்த நாடு என்று, இவர்கள் பிரிவினையை தான் ஏற்படுத்தி கொண்டிருப்பர். அதற்காகவாவது, தமிழகத்தில் தி.மு.க., தோற்கடிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் வதந்தி பரப்பும் சல்மா மீது, தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என பா.ஜ., தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
பதிவு நீக்கம் சல்மாவின் பதிவுக்கு, தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. சட்டசபை தேர்தல் நெருக்கத்தில் சல்மாவின் கருத்து, தி.மு.க.,விற்கு எதிராக புயலை கிளப்பி இருக்கிறது.
இதையடுத்து, பாகிஸ்தானுக்கு ஆதரவாக தான் வெளியிட்ட பதிவை, சல்மா நீக்கி விட்டார்.
வாசகர் கருத்து (52)
Barakat Ali - Medan,இந்தியா
10 ஏப்,2026 - 11:54 Report Abuse
இஸ்லாமியர்கள் ஏற்கனவே பிற மதத்தவரால் சந்தேகத்துடன் பார்க்கப்படுகிறார்கள் ...... 0
0
SULLAN - chennai,இந்தியா
10 ஏப்,2026 - 13:52Report Abuse
அது பார்க்கிறவனோட பிரச்சினை?? 0
0
Reply
Dv Nanru - mumbai,இந்தியா
10 ஏப்,2026 - 10:09 Report Abuse
சல்மா ஒரு பழமைவாத ரௌதர் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். மிக இளம் வயதிலேயே, அவருக்கு வாசிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. அவரது வீட்டில் இருந்த அடக்குமுறை விதிகள் அவரது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியதால், அவரால் இலக்கியத்தில் தனது ஆர்வத்தைத் தொடர முடியவில்லை. ஒருமுறை, அவர் தனது உறவினர் மற்றும் ஒரு ஆண் நண்பருடன் யாருக்கும் தெரியாமல் வெளியே சென்று, அவளுடே ராவுகள் என்ற மலையாளத் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்தார் அந்தத் திரைப்படம் ஒரு பதின்வயது பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையைச் சித்தரித்தது, ஆனால் சல்மாவுக்கு அந்த நேரத்தில் அதன் கருப்பொருள் பற்றித் தெரியாது. இந்த சாகசத்தைப் பற்றி அறிந்ததும், அவரது பெற்றோர் கோபமடைந்தனர். அவருக்கு 15 வயது ஆவதற்கு முன்பே அவரைப் பள்ளியிலிருந்து நிறுத்தி, வீட்டில் தனிமைப்படுத்தினர். அவரது உறவினரும் ஆண் நண்பரும் செய்த விளைவுகளின் காரணத்தினால் சல்மாவை வீட்டிலே தனிமையில் யாரும் சந்திக்காத வகையில் சிறைப்பிடித்து வைத்தன, இறுதியில் அவரது நண்பர் கிராம நூலகத்திலிருந்து அவருக்குப் புத்தகங்களைத் திருட்டுத்தனமாகக் கொடுக்கத் தொடங்கினார் இதுவே மிகப்பெரிய தவறு என்பது சல்மாவுக்கு தெரியாதா இதைப் பற்றி குர்ஆன் இஸ்லாத்தில் ஏதும் சொல்லவில்லையா.
இதற்கெல்லாம் இடம் கொடுத்தது இந்த இந்து மதம் தான் என்பதை சல்மா நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் அதை விட்டுவிட்டு பாகிஸ்தானுக்கு உதவியாக பேசுவது கருத்து வெளியிடுவது மிக மோசமான செயலாகும் நீ மட்டும் பாகிஸ்தானில் பிறந்திருந்தால் இப்படி மக்களவை உறுப்பினராக இருக்க முடியாது உன்னுடைய கருத்தையும் தெரிவிக்க முடியாது நீ வெறும் இருட்டு உலகில் தான் வாழ்ந்து கொண்டிருப்பாய் நீ இப்போது வெளிச்சத்தில் இருக்கின்றாய் அதுவும் சுதந்திரமாக பேச முடிகிறது எழுத முடிகிறது அதற்கெல்லாம் காரணம் ஹிந்து மதமே இந்து மதமே என்பதை மறந்து விடக்கூடாது..Jaihind 0
0
Reply
Dv Nanru - mumbai,இந்தியா
10 ஏப்,2026 - 09:36 Report Abuse
அதுக்கு தான் சொல்றது ராஜசபாவுக்கும் லோக்சபாவுக்கும் தகுதியான ஆள்களை மட்டும் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும் என்று இப்படி சல்மா மாதிரி தற்குறிகளையெல்லாம் நாடாளுமன்றத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் தேர்ந்தெடுத்து அனுப்பினாள் தவறு என்பது இப்போது தெரிகிறது நீ ஒரு இந்திய பிரஜை எப்போதுமே இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் எதிரான கருத்துக்களையும் செயல்களையும் செய்யக்கூடாது அப்படி மத ரீதியாக பேச வேண்டும் செயல்பட வேண்டும் என்றால் நீ பாகிஸ்தானுக்கு சென்று விடு அங்கே போய் தீவிரவாத மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை ஆதரிக்கலாம் இங்கு இந்தியாவில் இருந்து அதை செய்ய முடியாது இந்தியர்கள் ஆகிய நாங்கள் உன்னை செய்ய விட மாட்டோம்.. Jaihind 0
0
Reply
pn badhri - chennai,இந்தியா
10 ஏப்,2026 - 09:35 Report Abuse
சல்மா
Salma views/ opinion distorted. Unnecessary controversy by both parties. 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
10 ஏப்,2026 - 09:01 Report Abuse
பாகிஸ்தானை அமெரிக்க அதிபர் ஒரு கை கூலியாகவே பாவித்து அவரது அரண்மனையில் பாகிஸ்தான் அதிபர் - ராணுவ அதிகாரி இவர்களை எல்லாம் துச்சமாக நடத்தி, டிரம்புக்கு தோப்புக்காரன் செய்ய சொன்னால் செயத்து கொண்டு இருப்பவர்கைள இப்போது உலக நாட்டுக்களிடை நடக்கும் சண்டைக்கு அமைதி சமாதானம் செய்ய முற்படுகிறார்கள் என்று சொல்லவே நா கூசுகிறது டிரம்புக்கு தாளம் போடும் இந்த பாகிஸ்தான் அதிபரும் ராணுவ தளபதியும் என்ன நிலையில் டிரம்பு கொண்டு செல்வார் என்று இந்த அம்மையார் போக போக பார்ப்பார் அப்போது வாயை திறக்கவே மாட்டார் வேண்டுமானால் இந்த அம்மையாரும் பாகிஸ்தான் சென்று அவர்களுடன் சேர்ந்து அமைதிக்கு குந்தகம் விளைவிக்கலாம் செல்லட்டும் 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
10 ஏப்,2026 - 09:01 Report Abuse
பாகிஸ்தானை அமெரிக்க அதிபர் ஒரு கை கூலியாகவே பாவித்து அவரது அரண்மனையில் பாகிஸ்தான் அதிபர் - ராணுவ அதிகாரி இவர்களை எல்லாம் துச்சமாக நடத்தி, டிரம்புக்கு தோப்புக்காரன் செய்ய சொன்னால் செயத்து கொண்டு இருப்பவர்கைள இப்போது உலக நாட்டுக்களிடை நடக்கும் சண்டைக்கு அமைதி சமாதானம் செய்ய முற்படுகிறார்கள் என்று சொல்லவே நா கூசுகிறது டிரம்புக்கு தாளம் போடும் இந்த பாகிஸ்தான் அதிபரும் ராணுவ தளபதியும் என்ன நிலையில் டிரம்பு கொண்டு செல்வார் என்று இந்த அம்மையார் போக போக பார்ப்பார் அப்போது வாயை திறக்கவே மாட்டார் வேண்டுமானால் இந்த அம்மையாரும் பாகிஸ்தான் சென்று அவர்களுடன் சேர்ந்து அமைதிக்கு குந்தகம் விளைவிக்கலாம் செல்லட்டும் 0
0
Reply
senthilanandsankaran - ,இந்தியா
10 ஏப்,2026 - 08:55 Report Abuse
நீங்க தயவு செய்து பாகிஸ்தான் எலெக்ஷனில் நின்று அங்கு உள்ள பெண் உரிமைக்கு போராடுங்க. உங்க கவிதையா ரெண்டே எடுத்து விடுங்க. 0
0
Reply
Venkatramanks Venkat - ,இந்தியா
10 ஏப்,2026 - 07:31 Report Abuse
பாக்கிஸ்தான் னுக்கு ஆதரவு கொடுத்தால்
அவர்கள் பாகிஸ்தானுக்கு போகணும்.
இங்கே ஏன் இருக்கீங்க. உண்மை பேச வேண்டும். உங்களுக்கு இங்கே இடம்
கிடையாது. 0
0
Reply
SULLAN - chennai,இந்தியா
10 ஏப்,2026 - 06:18 Report Abuse
ஊடகங்களில் வந்த செய்தியை சொன்னதற்கு எதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் வன்மம் மற்றும் அங்கலாய்ப்பு. இந்த கூட்டம் இந்த தேசத்திற்கு எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பது நன்கு புரிகிறது. 0
0
Reply
ஆரூர் ரங் - ,
09 ஏப்,2026 - 14:44 Report Abuse
இரண்டாம் ஜாமங்களின் கதை என்ற பெயரில் இந்த சல்மா எழுதிய புத்தகத்தை படித்துப்பாருங்கள். எவ்வளவு கீழ்த்தரமானது என்பது புரியும். 0
0
SULLAN - chennai,இந்தியா
09 ஏப்,2026 - 19:08Report Abuse
அட உங்க வீட்டை எட்டிப்பார்த்து எழுதிய கதைதானே அது உங்களுக்கு தெரியாதா? பெயர்களை மட்டுமே மாற்றி எழுதியுள்ளார். 0
0
Suppan - Mumbai,இந்தியா
10 ஏப்,2026 - 16:21Report Abuse
சுள்ளான் வாங்கிய கூலிக்கு நன்கு முட்டுக்கொடுக்கிறார். மஞ்சள் புத்தகங்கள் எழுதிய இந்த அம்மணிக்கு திமுக கொடுத்த பரிசு மாநிலங்களவை அங்கத்தினர் பதவி. தலைவர்கள் வழிதான் அம்மணியின் வழியும். பிறந்த இனத்துக்காகக்கூவுகிறார். அப்படி ஒரு இனப்பாசம். இந்தப்போரில் இஸ்ரேலும் உள்ளது. அந்த நாட்டையும் போர் நிறுத்தத்தில் ஈடு படுத்த வக்கில்லை . 0
0
Reply
மேலும் 39 கருத்துக்கள்...
மேலும்
-
எந்தெந்த தடங்களில் மினி பஸ்கள் தேவை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு
-
தில்லை கங்கா நகரில் மேம்பாலம் அமைக்கப்படும்: அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் வாக்குறுதி
-
விளையாட்டு சர்வதேச நீச்சல் போட்டி: சென்னை வீரர் அசத்தல்
-
அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் குறைதீர் முகாம் தேதி மாற்றம்
-
'ஏசி' பெட்டியில் காப்பர் ஒயர் திருடிய சிறுவன் சிக்கினான்
-
எம்.கே.பி., நகர் வடக்கு நிழற்சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்களுக்கு 'நோட்டீஸ்'
Advertisement
Advertisement